சுடச்சுட

  

  ராமநாதபுரத்தில் வெற்றிகளை கொண்டாட முடியாமல் அதிமுக, திமுகவினர் தவிப்பு

  By ராமநாதபுரம்  |   Published on : 25th May 2019 07:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  dmkadmk

  ராமநாதபுரம் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும், பரமக்குடி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது.

  வெற்றி, தோல்வி மாறி, மாறி அமைந்திருப்பதால் வெற்றிகளைக் கொண்டாட முடியாமல் திமுக, அதிமுகவினர் தவித்து வருகின்றனர். ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியான பாஜக தோல்விடையந்துள்ளது. திமுக கூட்டணியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் கே.நவாஸ்கனி வெற்றி பெற்றுள்ளார்.    

  திமுகவைப் பொருத்தவரை மக்களவைத் தேர்தலிலும், பரமக்குடி இடைத் தேர்தலிலும் பெறுகிற வெற்றியே எதிர்காலத்தில் கட்சியின் செயல்பாட்டை வலிமைப்படுத்த உதவும் என்று கருதப்பட்டது. ஆகவே கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பொன்.முத்துராமலிங்கம், சுப.தங்கவேலன் தலைமையில் குழு அமைத்து தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தினர். 

  அதிமுகவைப் பொருத்தவரை பாஜக வேட்பாளரை ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில்  வெற்றி பெறவைக்க வேண்டிய கட்டாயமும், தமிழகத்தில் ஆட்சியைத் தக்க வைக்க பரமக்குடி இடைத் தேர்தலில் வெற்றி பெறும் கட்டாயமும் இருந்தது. அதற்கேற்ப முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் பிரசாரத்துக்காக ராமநாதபுரம் வந்தனர்.

  அமைச்சர் மணிகண்டன் தலைமையில் தேர்தல் பணிகளை அதிமுகவினர் சுறுசுறுப்பாக செய்து வந்தனர். இந்நிலையில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் கே.நவாஸ்கனி,  பரமக்குடி சட்டப்பேரவை இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் என்.சதர்ன் பிரபாகர்  வெற்றி பெற்றுள்ளனர்.

  இரு தேர்தல்களில் அதிமுக, திமுக தலா ஒரு  வெற்றியைப் பெற்றதால், இரு கட்சியினரும் தங்களது தேர்தல் வெற்றியை முழுமையாகக் கொண்டாட முடியாமல் தவித்து வருகின்றனர். அதே நேரத்தில் அதிமுக வெற்றியை தடுத்ததாக கருதப்படும் அமமுகவினர், தாங்கள் எதிர்பார்த்த வாக்குகள் கிடைக்கவில்லை என ஏமாற்றமடைந்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai