நாளையுடன் முடிவுக்கு வருகிறது தேர்தல் நடத்தை நெறிமுறைகள்

மக்களவைத் தேர்தல், சட்டப் பேரவை இடைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் திங்கள்கிழமையுடன் (மே 27) முடிவுக்கு வரவுள்ளன.
நாளையுடன் முடிவுக்கு வருகிறது தேர்தல் நடத்தை நெறிமுறைகள்

மக்களவைத் தேர்தல், சட்டப் பேரவை இடைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் திங்கள்கிழமையுடன் (மே 27) முடிவுக்கு வரவுள்ளன. இதையடுத்து, அமைச்சர்கள், தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள், பணியாளர்கள் தங்களது பணிகளுக்குத் திரும்பவுள்ளனர்.
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல், சட்டப் பேரவை இடைத் தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் 10-இல் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அன்றைய தினம் மாலையே நடைமுறைக்கு வந்தன. இதனால், தமிழக அரசின் சார்பில் புதிய திட்டங்களை அறிவிக்கவோ, புதிய பணிகளுக்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரவோ இயலாத நிலை ஏற்பட்டது. மேலும், புதிய பணிகளைத் தொடங்கி வைக்கவும் தடை ஏற்பட்டிருந்தது.
முடிந்தது தேர்தல்: கடந்த மார்ச் 10-இல் தொடங்கிய தேர்தல் பணிகள், கடந்த மே 23-ஆம் தேதியன்று வாக்கு எண்ணிக்கையுடன் நிறைவடைந்தது. வாக்கு எண்ணிக்கையின் போது ஏதேனும் பிரச்னை நேரிட்டால் மறுவாக்குப் பதிவு போன்ற அம்சங்களுக்காக தேர்தல் நடத்தை நெறிமுறைகள் மே 27-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், வாக்கு எண்ணும் பணிகள் தமிழகத்தில் முழுமையாக நிறைவடைந்துள்ளன. அதில் எந்தச் சிக்கலும் இல்லாத சூழலில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மாநிலம் முழுவதும் திங்கள்கிழமையுடன் (மே 27) முடிவுக்கு வரவுள்ளது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை (மே 28) முதல் அரசுப் பணிகள் தீவிரமாக நடைபெறுவதுடன், புதிய திட்டங்கள், புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள், புதிய திட்டங்களுக்கான ஒப்பந்தப் புள்ளிகளை கோரும் பணிகள் ஆகியன தொடங்கவுள்ளன.
புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு: இதனிடையே, தமிழக சட்டப் பேரவையில் 22 தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற எம்.எல்.ஏ.க்கள் விரைவில் பதவியேற்றுக் கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நடைமுறைகள் விலக்கப்பட்டு முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் தலைமைச் செயலகம் திரும்பிய பின் அதிமுகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் பதிவியேற்றுக் கொள்ள வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com