கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயலாக்குக: ராமதாஸ் வேண்டுகோள் 

கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயலாக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயலாக்குக: ராமதாஸ் வேண்டுகோள் 

சென்னை: கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயலாக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக திங்களன்றுஅவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மத்தியில் நரேந்திரமோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, அடுத்த சில நாட்களில் பதவியேற்க உள்ள நிலையில், தமிழகத்தின் நலன் கருதி கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம்   செயல்படுத்தப்படும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின்கட்கரி அறிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் கனவுத்திட்டமான இதை நிறைவேற்ற மத்திய அரசு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது.

தமிழகத்திற்கு தண்ணீர் பெற்றுத் தருவதற்காக கோதாவரி -காவிரி இணைப்புத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தவிருப்பது தனிப்பட்ட முறையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிடைத்த வெற்றியாகும். மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைவதற்கு பா.ம.க. முன்வைத்த 10 கோரிக்கைகளில் கோதாவரி & காவிரி இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்பது தான் மிகவும் முக்கியமான கோரிக்கை ஆகும்.

இந்தியாவின் வற்றா நதிகளில் ஒன்றான கோதாவரி ஆற்றில் ஒவ்வொரு ஆண்டும் 1100 டி.எம்.சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இது தமிழகத்திற்கு கர்நாடக தர வேண்டிய காவிரி ஆற்று நீரின் அளவை விட 6 மடங்கு அதிகமாகும். இந்தியாவின் மிகப்பெரிய நதிகள் இணைப்புத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழகத்திற்கு காவிரியில் ஆண்டுக்கு குறைந்தது 200 டி.எம்.சி தண்ணீர் கூடுதலாக இருக்கும். இது தமிழகத்தின் வேளாண்மை வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் துணையாக இருக்கும் என்பது மட்டுமின்றி, தமிழ்நாட்டுக்கு காவிரியில் ஆண்டு முழுவதும் தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்திட்டம் தமிழ்நாட்டின் வேளாண் தேவையை மட்டுமின்றி, குடிநீர் தேவையையும் நிறைவேற்றும் என்பது மகிழ்ச்சியான செய்தியாகும்.

அந்த வகையில் கோதாவரி & காவிரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து பாட்டாளி மக்கள் கட்சியும் நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com