சசிகலா மீதான அந்நியச் செலாவணி மோசடி வழக்கு ஜூலை 16க்கு ஒத்திவைப்பு

சசிகலா மீதான அந்நியச் செலாவணி மோசடி வழக்கு ஜூலை 16க்கு ஒத்திவைக்கப்பட்டது. 
சசிகலா மீதான அந்நியச் செலாவணி மோசடி வழக்கு ஜூலை 16க்கு ஒத்திவைப்பு

சசிகலா மீதான அந்நியச் செலாவணி மோசடி வழக்கு ஜூலை 16க்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. 

ஜெ.ஜெ. தொலைகாட்சிக்கு வெளிநாட்டில் இருந்து மின்னணு சாதனங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா மற்றும் அவரது உறவினர் பாஸ்கரன் ஆகியோருக்கு எதிராக அமலாக்கப் பிரிவினர்,  எழும்பூர் நீதிமன்றத்தில் அந்நியச் செலாவணி மோசடி வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாஸ்கரன் மீது குற்றச்சாட்டுப்பதிவு செய்யப்பட்டது. 

சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து வருவதால், அந்நியச் செலாவணி வழக்கில் காணொலிக் காட்சி மூலம் அவர் மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து காணொலிக் காட்சி மூலம் சசிகலாவிடம் குற்றச்சாட்டுப்பதிவு செய்யப்பட்டது. அமலாக்கத்துறை தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு, சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. 

இந்த வழக்கு, எழும்பூர் நீதிமன்றத்தில், இனறு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் காணாலி மூலம் சசிகலா ஆஜராவதற்கான உயர்நீதிமன்ற உத்தரவு நகல் சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து காணொலியில் சசிகலா, பாஸ்கரன் எந்த தேதியில் ஆஜராக வேண்டும் என்பது ஜூலை 16ல் முடிவெடுக்கப்படும எனக் கூறிய நீதிபதி வழக்கை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com