இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 12 ஆண்டு சிறை

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே  இளம்பெண்ணை ஏமாற்றி  பாலியல் வன்கொடுமை  செய்து, திருமணம் செய்ய மறுத்த இளைஞருக்கு 12 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும்


பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே  இளம்பெண்ணை ஏமாற்றி  பாலியல் வன்கொடுமை  செய்து, திருமணம் செய்ய மறுத்த இளைஞருக்கு 12 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து மகளிர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. 
     பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை  வட்டம், எறையூர் சர்க்கரை ஆலை பகுதியைச் சேர்ந்தவர் அமல்ராஜ் மகன் விஜயகுமார் (29). கூலித்தொழிலாளி. வேப்பந்தட்டை அருகேயுள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சவரிமுத்து மகள் சோனியாகாந்தி (26). இவர்கள் இருவரும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனராம். இந்நிலையில்,  திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி, கடந்த 2017 நவம்பர் மாதம் முருக்கன்குடி வனப்பகுதிக்கு அழைத்துச் சென்ற விஜயகுமார், அங்கு பாலியல் வன்கொடுமை  செய்ததாக கூறப்படுகிறது.  இதையடுத்து, விஜயகுமாரின் பெற்றோர் அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்துவந்தனர். இதையறிந்த பாதிக்கப்பட்ட பெண் தனது உறவினருடன் சென்று கேட்டதற்கு,  விஜயகுமார் மற்றும் அவரது பெற்றோர் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விஜயகுமாரைக் கைது செய்தனர். 
இந்த வழக்கு, பெரம்பலூர் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி என். விஜயகாந்த் முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இளம்பெண்ணை பாலியல் கொடுமை  செய்த விஜயகுமாருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும், அபராதத் தொகை செலுத்தத் தவறினால் மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டுமென உத்தரவிட்டார். இதையடுத்து, திருச்சி மத்திய சிறையில் விஜயகுமார் அடைக்கப்பட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com