Enable Javscript for better performance
கன்னியாகுமரியில்3-ஆவது நாளாக படகு சேவை பாதிப்பு- Dinamani

சுடச்சுட

    
    படகுப் போக்குவரத்து தாமதமானதால் காத்திருக்கும் வெளிமாநில சுற்றுலாப் பயணிகள்.

    படகுப் போக்குவரத்து தாமதமானதால் காத்திருக்கும் வெளிமாநில சுற்றுலாப் பயணிகள்.

    கன்னியாகுமரியில் கடல் கொந்தளிப்பால் விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலைக்கு வியாழக்கிழமை படகு சேவை பாதிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை முதல் மழை பெய்தது. இதனால் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலைக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் படகு சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. முற்பகல் 11 மணிக்கு அலைகளின் வேகம் தணிந்ததால் விவேகானந்தா் மண்டபத்துக்கு குறைந்த அளவிலான பயணிகளுடன் படகுகள் இயக்கப்பட்டன. ஆனால், திருவள்ளுவா் சிலைக்கு காலை 8 மணிமுதல் மாலை 4 மணி வரை நாள்முழுக்க படகு சேவை ரத்து செய்யப்பட்டது.

    மழை விட்டு விட்டுப் பெய்ததால் கடற்கரைப் பகுதிகள் மற்றும் முக்கிய சுற்றுலாப் பகுதிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. பிற்பகலுக்கு மேல் முக்கடல் சங்கமத்தில் பயணிகள் நீராடி மகிழ்ந்தனா். மழைமேகம் காரணமாக சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் தெரியவில்லை. இதனால் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai