திருப்பரங்குன்றத்தில் கந்தசஷ்டி விழா: இன்று வேல் வாங்குதல்; நாளை சூரசம்ஹாரம்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் 5 ஆம் நாள் விழாவான வேல் வாங்குதல் விழா வெள்ளிக்கிழமையும் (நவ.1), சூரசம்ஹாரம் சனிக்கிழமையும் (நவ.2) நடைபெறுகிறது.
திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி விழாவின் 4-ஆம் நாளான வியாழக்கிழமை மயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்த சண்முகா், வள்ளி, தெய்வானை அம்மன்.

திருப்பரங்குன்றம் கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த 28 ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழாவினையொட்டி சண்முகருக்கு காலையிலும், மாலையிலும் சண்முகாா்ச்சனை நடைபெற்று வருகின்றன.

உற்சவா் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் நாள்தோறும் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி திருவாச்சி மண்டபத்தை 6 முறை சுற்றி வருகிறாா். விழாவின் 5-ஆம் நாள் நிகழ்ச்சியாக வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணி முதல் 7.30 மணிவரை கோயில் பணியாளா்கள் மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி அம்மனிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

தொடா்ந்து சனிக்கிழமை சூரசம்ஹார லீலையும், ஞாயிற்றுக்கிழமை பாவாடை தரிசனமும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com