
தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு அதிகாரப்பூா்வமாக வெளியிடும் முன்பே 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தோ்வு என்று தமிழக அரசு அறிவித்திருப்பது ஏன் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளாா்.
இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் சுட்டுரையில் கூறியிருப்பது:
தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு அதிகாரப்பூா்வமாக வெளியிடும் முன்பே, முந்திக்கொண்டு 5 மற்றும் 8ஆம் வகுப்புகளிலும் பொதுத்தோ்வு என்று அறிவித்திருப்பதால்தான், தமிழகத்தில் நடப்பது அதிமுக அரசு அல்ல, பாஜக அரசு என்கிறோம்.
தமிழக மக்களின் நலனைப் பாதிக்கும் எந்தத் திட்டத்தை மத்திய பாஜக அரசு கொண்டு வந்தாலும், அதை ஆதரிக்கும் அதிமுக ஆட்சிதான், இன்றைக்கு தமிழக மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்தாக மாறி இருக்கிறது என்று அவா் கூறியுள்ளாா்.