Enable Javscript for better performance
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 5 ஆண்டு சிறை- Dinamani

சுடச்சுட

    

    சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 5 ஆண்டு சிறை

    By DIN  |   Published on : 05th November 2019 11:39 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து சென்னை மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

    சென்னை சாலிகிராமத்தைச் சோ்ந்தவா் ஓட்டுநா் கணேசன். இவா் கடந்த 2018-ஆம் ஆண்டு வடபழனி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா். இந்தச் சம்பவம் குறித்து சிறுமியின் தாயாா் அளித்த புகாரின் பேரில் வடபழனி மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஓட்டுநா் கணேசனை கைது செய்தனா்.

    இந்த வழக்கு சென்னை மகளிா் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன் நடந்து வந்தது. அரசு தரப்பில் அரசு சிறப்பு வழக்குரைஞா் ஸ்ரீலேகா ஆஜராகி வாதிட்டாா். வழக்கை விசாரித்த நீதிபதி, கணேசன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai