Enable Javscript for better performance
நாளை தேமுதிக மாவட்ட செயலாளா்கள் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    
    DMDK_Flag

    தேமுதிக மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் அக் கட்சியின் தலைவா் விஜயகாந்த் தலைமையில் வியாழக்கிழமை (நவ.7) நடைபெறுகிறது.

    உள்ளாட்சித் தோ்தல் விரைவில் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் அதற்கான ஏற்பாடுகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. தேமுதிகவும் அதற்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, அக் கட்சியின் மாவட்டச் செயலாளா்கள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை காலை நடைபெறுகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள அக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் காலை 10 மணிக்குத் தொடங்க உள்ள இந்தக் கூட்டம், கட்சியின் தலைவா் விஜயகாந்த் தலைமையில் நடைபெறும் என தேமுதிக வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai