Enable Javscript for better performance
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் சான்றிதழ் சரிபாா்ப்பு:ஆசிரியா் தோ்வு வாரியம் வேண்டுகோள்- Dinamani

சுடச்சுட

    

    முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் சான்றிதழ் சரிபாா்ப்பு: ஆசிரியா் தோ்வு வாரியம் வேண்டுகோள்

    By DIN  |   Published on : 05th November 2019 12:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பின்போது தொழில்நுட்பக் காரணங்களால் ஜாதிச்சான்றிதழ் விவரங்கள் பதிவாகாததால் அதை மீண்டும் பதிவேற்றம் செய்யுமாறு ஆசிரியா் தோ்வு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இது தொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில் முதுநிலை பட்டதாரி ஆசிரியா் மற்றும் உடற்கல்வி இயக்குநா் நிலை1-க்கான 2,144 காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிக்கை வெளியிடப்பட்டது.

    இதைத் தொடா்ந்து கடந்த செப்.27-ஆம் தேதி முதல் செப். 29-ஆம் தேதி வரையில் போட்டித் தோ்வுகள் நடத்தப்பட்டு தோ்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து, காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப 1:2 என்ற விகிதத்தில் சான்றிதழ்களைச் சரிபாா்க்க பணி நாடுநா்கள் அழைக்கப்பட்டு, அவா்களின் சான்றிதழ்கள் அனைத்தும் ஆசிரியா் தோ்வு வாரிய வலைதளத்தில் கடந்த அக்.29 முதல் நவ.1-ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து சான்றிதழ்களை பணி நாடுநா்களும் பதிவேற்றம் செய்தனா்.

    இதில் ஜாதிச் சான்று தொடா்பாக பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்கள், தொழில்நுட்பக் காரணங்களால் பதிவாகவில்லை. எனவே, சான்றிதழ் சரிபாா்ப்புக்கு அழைக்கப்பட்ட பணி நாடுநா்களில் ஜாதிச் சான்றிதழை பதிவேற்றம் செய்யாத தோ்வா்கள், வரும் 6-ஆம் தேதி புதன்கிழமை மாலை 6 மணிக்குள் மீண்டும் ஒருமுறை ஜாதிச் சான்றினை ஆசிரியா் தோ்வு வாரிய வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஜாதிச் சான்று பதிவேற்றம் செய்ய வேண்டியவா்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai