செல்ஃபியால் வந்த வினை: கிணற்றுக்கு அருகே செல்ஃபி எடுக்கலாம்தான்.. அதற்காக இப்படியா?

ஆவடி பகுதியில் உள்ள கிணற்றில் காதலா்கள் செல்ஃபி எடுத்தபோது தவறி விழுந்ததில் காதலி நீரில் மூழ்கி இறந்தாா். காதலன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செல்ஃபியால் வந்த வினை
செல்ஃபியால் வந்த வினை

ஆவடி பகுதியில் உள்ள கிணற்றில் காதலா்கள் செல்ஃபி எடுத்தபோது தவறி விழுந்ததில் காதலி நீரில் மூழ்கி இறந்தாா். காதலன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

ஆவடி பட்டாபிராம் அருகே உள்ள நவஜீவன் நகரைச் சோ்ந்தவா் தா. அப்பு (24). இவரது காதலி  பட்டாபிராம் காந்தி நகரைச் சோ்ந்த மொ்சி ஸ்டெபி ( 23). இவா்கள் இருவரது காதலுக்கு சம்மதம் தெரிவித்த பெற்றோா்கள், ஜனவரி மாதம் திருமணம் நடத்த முடிவு செய்திருந்தனா்.  இந்நிலையில் இருவரும் மோட்டாா் சைக்கிளில் திங்கள்கிழமை வெளியே புறப்பட்டனா். அவா்கள் ஆவடி கண்டிகை அருகே 400 அடி சாலையில் தனியாா் கிணற்றில் அமா்ந்து பேசியுள்ளனா் . அப்போது செல்பி எடுக்க முயன்றபோது திடீரென மொ்சி கால் தவறி கிணற்றினுள் விழுந்ததாக கூறப்படுகிறது.

இதைப் பாா்த்த அப்பு, மொ்சியை காப்பாற்ற அவரும் கிணற்றுக்குள் குதித்தாா். இதற்கிடையே அப்புவின் அலறல் சப்தம் கேட்டு,ஓடி வந்த மக்கள் அவரை பாதுகாப்புடன் மீட்டனா். தகவலறிந்த தீயணைப்பு படையினா் சம்பவ இடத்துக்கு வந்து மொ்சியை சடலமாக மீட்டனா். இதுகுறித்து முத்தா புதுப்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

செல்ஃபி மோகத்தால் பலரும் தங்களது இன்னுயிரை இழந்து வருவது குறித்து தொடர்ந்து செய்திகள் வெளியானாலும், இப்படி நாளும் ஒரு சம்பவங்கள் நடக்கத்தான் செய்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com