ஸ்விக்கியில் சாப்பாடு வர தாமதமானதால் நடந்த அக்கப்போரைப் பாருங்கள்.. இது வேற லெவல்!

உணவு தாமதமாகக் கொண்டு வந்ததால், வாடிக்கையாளருக்கும் ஸ்விக்கியில் உணவைக் கொண்டு வந்த நபருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.
food delivery delay
food delivery delay


சென்னை: உணவு தாமதமாகக் கொண்டு வந்ததால், வாடிக்கையாளருக்கும் ஸ்விக்கியில் உணவைக் கொண்டு வந்த நபருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.

அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர் ஸ்விக்கியில் உணவை ஆர்டர் கொடுத்துவிட்டு வெகு நேரம் ஆகியும் வராதததால், அந்நிறுவனத்தின் கஸ்டமர்கேரில் புகார் கொடுக்கிறார்.

பிறகு வெகு நேரம் கழித்து உணவைக் கொண்டு வந்த ஸ்விக்கி ஊழியர் ராஜேஷ் கன்னாவுக்கும், பாலாஜிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அதே பகுதியில் இருந்த சில ஸ்விக்கி ஊழியர்களை ராஜேஷ் உதவிக்கு அழைத்துள்ளார்.

அவர்கள் வந்ததும், வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. இது குறித்து பாலாஜி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், ராஜேஷ் கன்னா மற்றும் ஸ்விக்கி ஊழியர்கள் 3 பேர் உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதில் மிக முக்கிய விஷயம் என்னவென்றால், கைகலப்பின் போது தன் கழுத்தில் அணிந்திருந்த 10 சவரன் தங்கச் செயினைக் காணவில்லை என்று பாலாஜி புகார் அளித்திருப்பதுதான்.

அதே சமயம், பாலாஜி குடித்திருந்ததாகவும், தன்னிடம் வேண்டும் என்றே சண்டை போட்டதாகவும் ராஜேஷும் புகார் கொடுத்தார். இரு தரப்பினரையும் காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com