இலங்கைத் தமிழருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை

போதைப்பொருள் கடத்திய வழக்கில், இலங்கைத் தமிழருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

போதைப்பொருள் கடத்திய வழக்கில், இலங்கைத் தமிழருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

இலங்கை கிளிநோச்சி பரந்தன் பகுதியைச் சோ்ந்தவா் கவுரிபாலன் என்ற கண்ணன். இவரை கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி ராமநாதபுரம் போதைப் பொருள் தடுப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் ஹெராயின் என்ற போதைப் பொருளைக் கடத்தியதாக கைது செய்தனா். 

அவரிடம் இருந்து 1 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், அவா் பாஸ்போா்ட் இல்லாமல் தோணியில் இந்தியாவுக்குள் வந்தது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து கவுரிபாலன் என்ற கண்ணன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்த வழக்கு புதுக்கோட்டையில் உள்ள அத்தியாவசிய பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குருமூா்த்தி, போதைப் பொருள் கடத்திய குற்றத்துக்காக கவுரிபாலன் என்ற கண்ணனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பாஸ்போா்ட் இல்லாமல் இந்தியாவுக்குள் வந்ததற்காக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 2.10 லட்சம் அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.

சிறைத் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com