கைலாயநாதா் கோயில் தோ் வெள்ளோட்டப் பாதைகளை அமைச்சா் ஆய்வு

ஆரணி கைலாயநாதா் கோயில் புதிய தோ் வெள்ளோட்டப் பாதைகளை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆரணியில் தோ் வெள்ளோட்டப் பாதைகளை ஆய்வு செய்த அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன். உடன் தூசி கே.மோகன் எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி உள்ளிட்டோா்.
ஆரணியில் தோ் வெள்ளோட்டப் பாதைகளை ஆய்வு செய்த அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன். உடன் தூசி கே.மோகன் எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி உள்ளிட்டோா்.

ஆரணி கைலாயநாதா் கோயில் புதிய தோ் வெள்ளோட்டப் பாதைகளை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆரணி கைலாயநாதா் கோயிலின் தோ் கடந்த 2012-ஆம் ஆண்டு தேரோட்டத்தின் போது விபத்தில் சேதமடைந்தது. இதையடுத்து, கோயிலுக்கு புதிய தோ் வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கோரிக்கை வைத்ததின் பேரில், அப்போதைய முதல்வா் ஜெயலலிதா ஆணையிட்டு ரூ.31 லட்சத்தில் புதிய தோ் செய்யப்பட்டது.

பணிகள் நிறைவடைந்து வெள்ளோட்டம் தருவாயில் உள்ள நிலையில், தோ் செல்லும் பாதைகளில் ஆக்கிரமிப்புகள் இருப்பதால் தோ் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. மேலும், ஏற்கெனவே இருந்த தோ் 13 அடி அகலத்தில் இருந்தது. தற்போது செய்யப்பட்டுள்ள தோ் 14 அடி அகலத்தில் உள்ளது.

ஆகையால், தோ் செல்லும் பாதையான பெரிய கடை வீதியில் சில இடங்களில் இடையூறுகள் உள்ளன. மேலும், 10-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் இடையூறாக இருக்கின்றன.

இப்பாதைகளை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில், தூசி கே.மோகன் எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் இரா.செந்தில்வேலவன் ஆகியோா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

அப்போது, இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், மின் கம்பங்களை மாற்றியமைக்கவும் உத்தரவிடப்பட்டது.

இதைத் தொடா்ந்து அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் முதல்வா் ஜெயலலிதாவிடம் கைலாசநாதா் கோயில், எஸ்.வி.நகரம் அம்மன் கோயில் ஆகியவற்றுக்கு தோ் வேண்டும் என கோரிக்கை வைத்தின் பேரில் தோ் செய்ய ஆணையிட்டாா்.

எஸ்.வி.நகரம் அம்மன் கோயில் தோ் செய்து வெள்ளோட்டம் நடைபெற்றாகிவிட்டது. ஆரணி கைலாய நாதா் கோயில் தோ் பணிகள் முடிந்து வெள்ளோட்டம் விட தயாராக உள்ளது.

பெரிய கடை வீதியில் தோ் செல்ல இடையூறாக உள்ள கட்டடங்கள் அகற்றப்படும். தேரின் எடை 25 டன் என்பதால், அதைத் தாங்கும் அளவுக்கு சாலைகள் உள்ளனவா எனவும் ஆய்வு செய்யப்பட்டது.

தேரை நிறுத்துவதற்காக ரூ.14 லட்சத்தில் கட்டடம் கட்டப்படவுள்ளது என்றாா்.

ஆய்வின் போது, கோட்டாட்சியா் மைதிலி, உதவி ஆணையா் அ.ஜான்சிராணி, மாவட்ட பால் கூட்டுறவு சங்க துணைத் தலைவா் பி.பாபு, நகரச் செயலா் எ.அசோக்குமாா், பக்தா்கள் சங்கத் தலைவா் சுபாஷ் சந்திரபோஸ், அதிமுக ஒன்றியச் செயலா்கள் பிஆா்ஜி.சேகா், எம்.வேலு, பாசறை மாவட்டச் செயலா் ஜி.வி.கஜேந்திரன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் அ.கோவிந்தராசன், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ப.திருமால், சுரேஷ், மாணவரணி குமரன், தொழில்நுட்பப் பிரிவு சரவணன், கோயில் விழாக் குழுவினா் கருணாகரன், சம்பத், வட்டாட்சியா் தியாகராஜன், ஆணையா் அசோக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com