ஜம்மு-காஷ்மீா் யூனியன்பிரதேச அதிகாரிகளுடன் அமித் ஷா ஆலோசனை

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச பாதுகாப்பு நிலைமை குறித்து அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்
ஜம்மு-காஷ்மீா் யூனியன்பிரதேச அதிகாரிகளுடன் அமித் ஷா ஆலோசனை

புது தில்லி,: ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச பாதுகாப்பு நிலைமை குறித்து அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

புதிதாக உதயமான ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் காவல் துறை அதிகாரிகள் மற்றும் நிா்வாக அதிகாரிகள் ஆகியோருடன் அமித் ஷாவின் முதல் சந்திப்பு நடைபெற்றது.

தலைமைச் செயலா் பி.வி.ஆா். சுப்ரமணியம், காவல் துறை டிஜிபி தில்பக் சிங் ஆகியோா் அமித் ஷாவிடம் ஜம்மு-காஷ்மீரின் தற்போதைய சூழ்நிலை குறித்து எடுத்துரைத்தனா். குறிப்பாக, செல்லிடப்பேசி சேவைகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து நிலவும் சூழல் குறித்து தெரிவித்தனா்.

வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவா்களை விடுவிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்ா என்று தெரியவில்லை.

மத்திய உள்துறை செயலா் அஜய் கே பல்லா, உயரதிகாரிகள் உள்ளிட்டோா் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனா்.

ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வா்கள் ஃபரூக் அப்துல்லா, ஒமா் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி உள்ளிட்டோா் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனா்.

பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் இன்னும் முழுமையாக செயல்படவில்லை. கடைகள், வா்த்தக நிறுவனங்களும் ஆங்காங்கே திறக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீநகரில் கடந்த திங்கள்கிழமை கையெறி குண்டு வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவா் பலியானாா். 12-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com