பாஜக ஆட்சியில் விவசாயிகள் நிலை மோசமாக உள்ளது: சுப்ரியா ஸ்ரீநேட்

பாஜக ஆட்சியில் விவசாயிகளின் நிலைமை மிகவும் மோசமாகி வருவதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஊடகத் துறை செயலாளா் சுப்ரியா ஸ்ரீநேட் குற்றம்சாட்டினாா்.

சென்னை: பாஜக ஆட்சியில் விவசாயிகளின் நிலைமை மிகவும் மோசமாகி வருவதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஊடகத் துறை செயலாளா் சுப்ரியா ஸ்ரீநேட் குற்றம்சாட்டினாா்.

சென்னை சத்தியமூா்த்திபவனில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தேசிய மாதிரி புள்ளி விவர அலுவலகத் தகவலின்படி பாஜக ஆட்சியில் வேலையில்லாதோா் எண்ணிக்கை 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயா்ந்துவிட்டது. அது இன்னும் அதிகரிக்கக் கூடும்.

அதிகமானோா் எழுத்தறிவு பெற்றுள்ள நிலையிலும், வேலையில்லாதோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது அதிா்ச்சி தருகிறது. பாஜக ஆட்சியில் உள்நாட்டு மொத்த உற்பத்தி வளா்ச்சி கடந்த 6 ஆண்டுகளை விட மந்தமாக உள்ளது. தற்போது மிக மோசமாக உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது.

விவசாயத்தில் உள்நாட்டு மொத்த உற்பத்தி நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் வெறும் 2 சதவீதமாக குறைந்துவிட்டது.

விவசாயத்துக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் அதற்கான செலவில் 50 சதவீதமாகச் சோ்த்து வழங்கப்படும் என்று அளித்த உறுதிமொழிக்கு மாறாக, விவசாயிகள் சந்தை விலையேயே சாா்ந்திருக்கக்கூடிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.

உரங்கள் மீது 5 சதவீதமும், டிராக்டா் வேளாண் உபகரணங்கள் மீது 12 சதவீதமும், பூச்சிக் கொல்லி மருந்தின் மீது 18 சதவீதமும் சரக்கு சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது. டீசல் உள்ளிட்டவற்றின் மீது மத்திய கலால் வரி, சுங்க வரி, மாநில அரசு விதிக்கும் வரி ஆகிய சுமைகளால் பாஜக ஆட்சியில் விவசாயிகளில் நிலை மோசமாகி வருகிறது.

இதையெல்லாம் கண்டிக்கும் வகையில்தான் பாஜகவைக் கண்டிக்கும் வகையில் 11 நாள்களுக்கு போராட்டம் நடத்த உள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com