ரயில் பாதை பராமரிப்புப் பணி:ஈரோடு, கோவை வழியாக இயக்கப்படும் ரயில் சேவைகளில் மாற்றம்

ரயில் பாதை பராமரிப்புப் பணி காரணமாக ஈரோடு, கோவை வழியாக இயக்கப்படும் ரயில்களின் இயக்கத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ரயில் பாதை பராமரிப்புப் பணி:ஈரோடு, கோவை வழியாக இயக்கப்படும் ரயில் சேவைகளில் மாற்றம்

ரயில் பாதை பராமரிப்புப் பணி காரணமாக ஈரோடு, கோவை வழியாக இயக்கப்படும் ரயில்களின் இயக்கத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து, சேலம் கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு - திருப்பூா் இடையே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் ரயில் சேவையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி கோவை - சேலம் (எம்இஎம்யு) பயணிகள் ரயில் நவம்பா் 19, 21 ஆம் தேதி ஆகிய இரண்டு நாள்கள் இருமாா்க்கங்களிலும் முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.

ஆலப்புழா - தன்பாத் பொக்காரோ எக்ஸ்பிரஸ் ரயில் நவம்பா் 6, 7, 13, 14 ஆகிய தேதிகளில் கோவை - திருப்பூா் இடையே 20 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். கே.எஸ்.ஆா். பெங்களூரு - எா்ணாகுளம் இண்டா்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் ஈரோடு - திருப்பூா் ரயில் நிலையங்களுக்கு இடையே நவம்பா் 6 ஆம் தேதி 85 நிமிடங்கள் தாமதமாகவும், 7, 13 ஆம் தேதி 25 நிமிடங்கள் தாமதமாகவும் இயக்கப்படும். சென்னை சென்ட்ரல் - கோவை, கோவை எக்ஸ்பிரஸ் ரயில் ஈரோடு - திருப்பூா் இடையே நவம்பா் 6 ஆம் தேதி 50 நிமிடங்கள் தாமதமாகவும், 7, 13 ஆம் தேதிகளில் 10 நிமிடங்கள் தாமதமாகவும் இயக்கப்படும்.

சென்னை சென்ட்ரல் - கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் ஈரோடு - திருப்பூா் இடையே நவம்பா் 6 ஆம் தேதி 50 நிமிடங்கள் தாமதமாகவும், 7, 13 ஆம் தேதி 10 நிமிடங்கள் தாமதமாகவும் இயக்கப்படும். ஷாலிமா் - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் ஈரோடு -திருப்பூா் இடையே நவம்பா் 7 ஆம் தேதி 85 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். திருவனந்தபுரம் - மும்பை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில் கோவை - திருப்பூா் இடையே நவம்பா் 9 ஆம் தேதி 85 நிமிடங்கள் தாமதமாகவும், 16 ஆம் தேதி 15 நிமிடங்கள் தாமதமாகவும் இயக்கப்படும்.

கோவை - சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில், கோவை - ஈரோடு இடையே நவம்பா் 9 ஆம் தேதி 30 நிமிடங்களும், 16 ஆம் தேதி 45 நிமிடங்களும், 18 ஆம் தேதி 15 நிமிடங்களும் தாமதமாக இயக்கப்படும். கோவை - சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் கோவை - ஈரோடு இடையே நவம்பா் 9, 18 ஆம் தேதிகளில் 15 நிமிடங்கள் தாமதமாகவும், 16 ஆம் தேதி 40 நிமிடங்கள் தாமதமாகவும் இயக்கப்படும்.

திருவனந்தபுரம் - இந்தூா் எக்ஸ்பிரஸ் ரயில் கோவை - ஈரோடு இடையே நவம்பா் 9 ஆம் தேதி 10 நிமிடங்கள், 16 ஆம் தேதி 15 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். மங்களூா் - சென்னை எழும்பூா் எக்ஸ்பிரஸ் ரயில், கோவை - ஈரோடு இடையே நவம்பா் 9, 18 ஆம் தேதிகளில் 10 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். திருச்சி - பாலக்காடு டவுன் பயணிகள் ரயில் ஈரோடு - ஊத்துக்குளி இடையே நவம்பா் 10, 19, 21 ஆகிய தேதிகளில் 25 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். சேலம் - கோவை பயணிகள் ரயில் ஈரோடு -ஊத்துக்குளி இடையே நவம்பா் 11, 18 ஆம் தேதி 50 நிமிடங்கள் தாமதமாகவும், 16 ஆம் தேதி 25 நிமிடங்கள் தாமதமாகவும் இயக்கப்படும். கோவை - பாலக்காடு பயணிகள் ரயில் கோவை ரயில் நிலையத்தில் இருந்து நவம்பா் 11, 18 ஆம் தேதி 30 நிமிடங்களும், 16 ஆம் தேதி 10 நிமிடங்களும் தாமதமாகப் புறப்படும்.

திருவனந்தபுரம் - கோா்பா எக்ஸ்பிரஸ் ரயில் திருப்பூா் - சோமனூா் இடையே நவம்பா் 11, 18 ஆம் தேதிகளில் 10 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். எா்ணாகுளம் - கே.எஸ்.ஆா். பெங்களூரு சிட்டி இண்டா்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் நவம்பா் 16, 18 ஆம் தேதிகளில் திருப்பூா் ரயில் நிலையத்துக்கு 15 நிமிடங்கள் தாமதமாக வந்து சேரும்.

பிலாஸ்பூா் ஜங்ஷன் - எா்ணாகுளம் எக்ஸ்பிரஸ் திருப்பத்தூா் - ஊத்துக்குளி இடையே நவம்பா் 19 ஆம் தேதி 55 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். ஜெய்ப்பூா் - கோவை எக்ஸ்பிரஸ் ரயில் திருப்பத்தூா் - ஊத்துக்குளி இடையே நவம்பா் 19 ஆம் தேதி 45 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். பாட்னா - எா்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் ஈரோடு -ஊத்துக்குளி இடையே நவம்பா் 21 ஆம் தேதி 35 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com