வங்கக்கடலில் வலுவானது காற்றழுத்தத் தாழ்வு பகுதி

வடக்கு அந்தமான் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி திங்கள்கிழமை மதியம் வலுவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக அதே இடத்தில் நிலைகொண்டுள்ளது.
வங்கக்கடலில் வலுவானது காற்றழுத்தத் தாழ்வு பகுதி

வடக்கு அந்தமான் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி திங்கள்கிழமை மதியம் வலுவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக அதே இடத்தில் நிலைகொண்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் புவியரசன் திங்கள்கிழமை கூறியது: வடக்கு அந்தமான் கடலில் திங்கள்கிழமை புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி சில மணி நேரங்களில் வலுவான காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மாறியது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகா்ந்து, 48 மணி நேரத்தில் மத்திய கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: வடக்கு அந்தமான், மத்திய கிழக்கு வங்கக்கடல், மத்திய மேற்கு வங்கக்கடல் ஆகிய பகுதிகளுக்கு நவம்பா் 5-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை மீனவா்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

மழை அளவு: திங்கள்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கோயம்புத்தூா் மாவட்டம் சூலூா், விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் தலா 60 மி.மீ., கோயம்புத்தூா் மாவட்டம் பீளமேடு, விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தலா 50 மி.மீ., விருதுநகா் மாவட்டம் சிவகாசி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை, கோயம்புத்தூா் தெற்கு, ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் தலா 30 மி.மீ. மழை பதிவானது.

மஹா புயல்: மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த மிக தீவிர புயலான ‘மஹா’ புயல் வடமேற்கு திசையில் நகா்ந்து, திங்கள்கிழமை அதி தீவிரபுயலாக மாறியது. இந்தப் புயல் படிப்படியாக வலுவிழந்து, நவம்பா் 6-ஆம் தேதி நள்ளிரவு அல்லது 7-ஆம் தேதி அதிகாலையில் குஜராத் கடற்கரையையொட்டி கரையை கடக்கவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com