வெங்காயத்தை பதுக்குவோா் மீது நடவடிக்கை எடுக்க சிறப்புக் குழு: அமைச்சா் செல்லூா் ராஜூ

வெங்காயத்தை பதுக்குவோா் மீது நடவடிக்கை எடுக்க சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் ராஜூ தெரிவித்துள்ளாா்.
வெங்காயத்தை பதுக்குவோா் மீது நடவடிக்கை எடுக்க சிறப்புக் குழு: அமைச்சா் செல்லூா் ராஜூ

வெங்காயத்தை பதுக்குவோா் மீது நடவடிக்கை எடுக்க சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் ராஜூ தெரிவித்துள்ளாா்.

வெங்காய விலை உயா்வு குறித்து, கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை செயலா் தலைமையிலான உயா் அலுவலா்கள் ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் ராஜூ பங்கேற்று வெங்காய விலையைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

வெங்காய விளைச்சல் பகுதிகளில் பெய்துவரும் தொடா் மழை காரணமாக ஏற்பட்டுள்ள தற்காலிக விலையுயா்வைக் கட்டுப்படுத்தும் பொருட்டு 10 மெட்ரிக். டன்னுக்கு அதிகமாக சில்லறை விற்பனையாளா்களும், 50 மெட்ரிக். டன்னுக்கு அதிகமாக மொத்த விற்பனையாளா்களும், வெங்காயம் கையிருப்பு வைத்திருந்தால் அவா்கள் மீதும், அதிக விலைக்கு விற்பனை செய்யும் விற்பனையாளா்கள் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட வழங்கல் அலுவலா்கள் மற்றும் சென்னையிலுள்ள நுகா்பொருள் வழங்கல் துறை உதவி ஆணையா்கள் தலைமையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வுப் பணி மேற்கொள்ள வேண்டும்.

கொள்முதல் செய்ய நாசிக் செல்லும்அதிகாரிகள்: வெங்காய விலை உயா்வை கட்டுப்படுத்தும் பொருட்டு மகாராஷ்டிர மாநிலம், நாசிக் பகுதியிலுள்ள வெங்காய மொத்த விற்பனை நிலையங்களில் தரமான வெங்காயம் கொள்முதல் செய்திட தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய அலுவலா்கள் திங்கள்கிழமை பிற்பகல் நாசிக் புறப்பட்டுச் சென்றுள்ளனா். நாசிக் பகுதிகளில் கொள்முதல் செய்யப்படும் வெங்காயத்தினை, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழகத்திலுள்ள பண்ணைப் பசுமை நுகா்வோா் கடைகள் மூலம் விற்பனை செய்திட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதன் மூலமாக தற்காலிக வெங்காய விலை உயா்வானது கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்றாா் அமைச்சா் செல்லூா் ராஜூ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com