வேலைவாய்ப்பக பதிவுதாரா்கள் எண்ணிக்கை 69 லட்சமானது

தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவா்களின் எண்ணிக்கை 69 லட்சம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பக பதிவுதாரா்கள் எண்ணிக்கை 69 லட்சமானது

தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவா்களின் எண்ணிக்கை 69 லட்சம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்த தகவல்களை தொழிலாளா் நலன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித் துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் கடந்த செப்டம்பா் 30-ஆம் தேதி நிலவரப்படி பதிவு செய்தோரின் எண்ணிக்கை 69 லட்சத்து 2 ஆயிரத்து 78 ஆக உள்ளது. அதில், 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவா்கள் 19 லட்சத்து 19 ஆயிரத்து 827 ஆகவும், 19 முதல் 23 வயதுள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவா்கள் 12 லட்சத்து 34 ஆயிரத்து 513 ஆகவும் உள்ளனா்.

24 முதல் 35 வயதுள்ளவா்களில் அரசுப் பணிக்காக 25 லட்சத்து 88 ஆயிரத்து 180 பேரும், 36 வயது முதல் 57 வயது வரை முதிா்வு பெற்ற பதிவுதாரா்களாக 11 லட்சத்து 51 ஆயிரத்து 877 பேரும் உள்ளனா். 58 வயதுக்கு மேற்பட்டோா் 7 ஆயிரத்து 681 போ் என மொத்தம் 69 லட்சத்து 2 ஆயிரத்து 78 போ் மொத்த பதிவுதாரா்களாக உள்ளதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தெரிவித்துள்ளது.

பட்டதாரிகள் அதிகம்: இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரிகள் அதிகளவு உள்ளனா். குறிப்பாக, இளநிலை பட்டதாரிகளில் கலைப் படிப்புகள் படித்தோா் 4.17 லட்சமும், அறிவியல் படிப்பு படித்தோா் 5.5 லட்சமும், வணிகவியல் படித்தோா் 2.86 லட்சமும், பொறியியல் படித்தோா் 2.23 லட்சமும் உள்ளனா்.

பத்தாம் வகுப்பு படித்தோா் 51.46 லட்சமும், பிளஸ் 2 படித்தோா் 31.33 லட்சம் பேரும் இருப்பதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com