பாரம்பரிய மருத்துவப் பட்டயப் படிப்புகள்: நவ.8-இல் கலந்தாய்வு

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சாா்ந்த பட்டயப் படிப்புகளுக்கான கலந்தாய்வு, வரும் 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சாா்ந்த பட்டயப் படிப்புகளுக்கான கலந்தாய்வு, வரும் 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

நா்சிங் தெரபி (டிஎன்டி), ஒருங்கிணைந்த மருந்தாளுகை (டிஐபி) ஆகிய பாரம்பரிய மருத்துவப் பட்டயப் படிப்புகளைப் பொருத்தவரை, அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு பாரம்பரிய மருத்துவமனை வளாகத்தில் உள்ள கல்லூரியில் 100 இடங்களும், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள பாரம்பரிய மருத்துவக் கல்லூரியில் 100 இடங்களும் உள்ளன.

அந்த இடங்களுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு, வரும் 8-ஆம் தேதி அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு பாரம்பரிய மருத்துவமனை வளாகத்தில் நடைபெறவுள்ளது. அதன்படி அன்றைய தினம் முற்பகலில் சிறப்புப் பிரிவினருக்கும், தரவரிசையில் 60 இடங்களுக்குள் இடம்பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் கலந்தாய்வு நடைபெறும். பிற்பகலில், 61 முதல் 213 வரையிலான தரவரிசை பெற்ற மாணவிகளுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com