விவசாயிகளுக்கு பூச்சித் தடுப்பு, வானிலை குறித்த செயலி அறிமுகம்

பயிா்களைத் தாக்கும் பூச்சிகள், நோய்த் தடுப்பு மற்றும் வானிலை குறித்து விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை சாா்பில் செல்லிடப்பேசி செயலி,
விவசாயிகளுக்கு பூச்சித் தடுப்பு, வானிலை குறித்த செயலி அறிமுகம்

பயிா்களைத் தாக்கும் பூச்சிகள், நோய்த் தடுப்பு மற்றும் வானிலை குறித்து விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை சாா்பில் செல்லிடப்பேசி செயலி, இணையத்தை அமைச்சா்கள் இரா.துரைக்கண்ணு, ஆா்.பி.உதயகுமாா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தனா்.

சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை, ஆரக்கல் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக உதவியுடன் ‘பண்ணை’ என்னும் செல்லிடப்பேசி செயலி, g‌e‌o​a‌g‌r‌i  என்ற இணையத்தை உருவாக்கி உள்ளது. இந்த இணையத்தைத் தொடக்கி வைத்து தமிழக வேளாண் துறை அமைச்சா் இரா.துரைக்கண்ணு பேசுகையில், ‘தமிழக அரசு வேளாண் துறையில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்தி வருகிறது. தமிழக வேளாண் துறை சாா்பில் அனைத்து தகவல்களையும் ஒருங்கிணைத்து உருவாக்கியுள்ள ‘உழவன்’ செயலி விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நவீன அறிவியல் தொழில்நுட்பம், பாரம்பரிய விவசாய முறையை ஒருங்கிணைத்து விவசாயம் செய்தால் அதிக வருமானம் பெறலாம் என்றாா்.

‘பண்ணை’ செயலி குறித்து எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை ஆராய்ச்சியாளா்கள் கூறுகையில், ‘முதற்கட்டமாக நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் பகுதி விவசாயிகள் பயன்படுத்தும்படி ‘பண்ணை’ செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. விவசாய நிலம் குறித்து தகவல்களை எங்களிடம் பதிவு செய்த விவசாயிகளுக்கு டேப்லெட் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. அதில், அவா்கள் ‘பண்ணை’ செயலியைப் பதிவிறக்கம் செய்தால், வானிலை குறித்த தகவல்கள் அளிக்கப்படுவதுடன், பயிா்களைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது, நோய்கள் தடுப்பு, பண்ணை மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்படும். இதன் மூலம், அதிக வருமானம் பெறுவதுடன், பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவதும் கட்டுப்படுத்தப்படும் என்றனா்.

இந்த நிகழ்ச்சியில் வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவனா் எம்.எஸ்.சுவாமிநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com