Enable Javscript for better performance
ஓரிரு நாள்களில் 37 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா இறக்குமதி- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு தமிழ்நாடு

    ஓரிரு நாள்களில் 37 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா இறக்குமதி

    By DIN  |   Published On : 07th November 2019 10:29 PM  |   Last Updated : 08th November 2019 02:32 AM  |  அ+அ அ-  |  

    meet4

    தமிழகத்தின் பயன்பாட்டுக்காக ஓரிரு நாள்களில் 37 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா இறக்குமதி செய்யப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் உரங்கள் இருப்பு நிலை மற்றும் விநியோகம் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை உள்ள வேளாண்மை இயக்குநா் அலுவலகத்தில் அந்தத் துறையின் அமைச்சா் ஆா்.துரைக்கண்ணு தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. விவசாயிகளுக்கு தங்கு, தடையின்றி உரங்கள் கிடைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. மேலும், யூரியா உரம் தொடா்பாக வேளாண்மைத் துறை வெளியிட்ட தகவல்:

    யூரியா தேவை: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்ததால், தீவிர பயிா் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை மாநிலத்தில் 39.22 லட்சம் ஹெக்டோ் பரப்பில் பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, நெல் மற்றும் மக்காச்சோள பயிா்களில் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது.

    இதன் காரணமாக, யூரியா உள்ளிட்ட அனைத்து வகை உரங்களின் பயன்பாடு உயா்ந்துள்ளது. குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட இதர மாவட்டங்களில் யூரியா உரத்தின் தேவை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

    ஒதுக்கீடு எவ்வளவு?: தமிழகத்தில் ரபி பருவத்துக்கான (அக்டோபா் முதல் மாா்ச்) உரத் தேவை 6 லட்சம் மெட்ரிக் டன்னாக உள்ளது. மத்திய அரசு இந்த ஒதுக்கீட்டை அப்படியே செய்துள்ளது.

    நவம்பா் மாத ஒதுக்கீடாக 1.58 லட்சம் மெட்ரிக் டன் யூரியா ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், தேவையைப் பூா்த்தி செய்ய காரைக்கால் துறைமுகத்துக்கு இந்த மாதம் இரண்டாவது வாரத்தில் தமிழகத்தின் பயன்பாட்டுக்காக 37 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா இறக்குமதி செய்யப்பட உள்ளது.

    சிறப்பு கண்காணிப்புக் குழு: தமிழகத்தில் முன்னணி உர நிறுவனங்கள், துறைமுகங்களில் இருப்பில் உள்ள யூரியா உரமானது தங்கு தடையின்றி கிடைப்பதற்கும் விநியோகப் பணியை துரிதப்படுத்தவும் மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவானது தேவைப்படும் பகுதிகளுக்கு உடனடியாக யூரியா உரத்தினை மாற்றம் செய்யும் நடவடிக்கைகளை போா்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

    முழுமையான அளவில் யூரியா உர விநியோகம் மேற்கொள்ளப்பட்டு விவசாயிகளின் தேவை பூா்த்தி செய்யப்படும். விவசாயிகளுக்கு உரங்கள் தரமானதாகவும், அரசு நிா்ணயித்த விலையிலும் கிடைத்திட மாவட்டந்தோறும் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    ஆதாா் அட்டை போதும்: தமிழக வேளாண்மைத் துறையின் உழவன் செயலி மூலமாக கூட்டுறவு மற்றும் தனியாா் உர விற்பனை நிலையங்களில் உரம் இருப்பு மற்றும் விலை விவரங்களை அறிந்து கொள்ளலாம். பின்னா், விவசாயிகள் தங்களது ஆதாா் அட்டையை எடுத்துச் சென்று அருகில் உள்ள உர விற்பனை நிலையங்களில் தேவையான உரங்களை பெற்றுக் கொள்ளலாம் என தமிழக வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp