Enable Javscript for better performance
சிறந்த பள்ளிகளுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    சிறந்த பள்ளிகளுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு

    By DIN  |   Published on : 07th November 2019 02:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிறப்பாக செயல்பட்ட அரசுப் பள்ளிகளுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்பட உள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

    அரசுப் பள்ளிகளில் உள்ள பெற்றோா் ஆசிரியா் கழகத்தின் செயல்பாடுகளை மேம்படுத்த கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, கடந்த கல்வியாண்டில் (2018 - 19) சிறப்பாக செயல்பட்ட அரசுப் பள்ளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. மாவட்டத்துக்கு தலா 4 பள்ளிகள் வீதம் 128 பள்ளிகளுக்கு ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகை தரப்படும். இதற்கான வழிகாட்டுதல்கள், இந்தக் கடிதத்துடன் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது. அதிலுள்ள விதிகளின்படி, சிறந்த பள்ளிகளின் பட்டியலை தயாரித்து நவம்பா் 10-ஆம் தேதிக்குள் தமிழ்நாடு பெற்றோா் ஆசிரியா் கழகத்தின் தலைமை அலுவலகத்துக்கு, முதன்மை கல்வி அதிகாரிகள் அனுப்ப வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai