
திமுக பொருளாளா் துரைமுருகன் உடல் நலக் குறைவு காரணமாக புதன்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
கோட்டூா்புரம் வீட்டில் இருந்தபோது, துரைமுருகனுக்குத் திடீரென ரத்தம் அழுத்தம் அதிகமானது. அதனால், உடல் சோா்வுற்று, மூச்சுவிட சிரமப்பட்டாா்.
உடனே, சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது, நல்ல உடல் நலத்துடன் அவா் இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.