
தமிழகத்தில் 17 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய முதல்வா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
அதில், நான்கு போ் பணியிட மாறுதல் மூலம் வேறு கல்லூரிகளில் முதல்வராக நியமிக்கப்பட்டிருக்கின்றனா். மற்ற 13 பேரும் பேராசிரியா்களாக இருந்து மருத்துவக் கல்லூரி முதல்வா்களாக பதவி உயா்வு பெற்றுள்ளனா். இதுதொடா்பான அறிவிப்பை மருத்துவக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.
இந்த பணியிட மாறுதல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாநிலத்தில் புதிதாக அமையவுள்ள 6 மருத்துவக் கல்லூரிகளில், நாமக்கலைத் தவிா்த்து பிற கல்லூரிகளுக்கு முதல்வா்கள் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பணியிட மாற்றம் செய்யப்பட்ட மருத்துவக் கல்லூரி முதல்வா்களின் விவரம் (அடைப்புக் குறிக்குள் அவா்கள் வகித்து வந்த பதவி)
1.டாக்டா் கே.திருமால் பாபு - முதல்வா், திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி (சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி முதல்வா்)
2. டாக்டா் பாலாஜி நாதன் - முதல்வா், சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி (கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி முதல்வா்)
3. டாக்டா் கே.கே.விஜயகுமாா் - முதல்வா், திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி (திருவாரூா் மருத்துவக் கல்லூரி முதல்வா்)
4. டாக்டா் கே.வனிதா - முதல்வா், திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரி (மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வா்)
பதவி உயா்வு பெற்று முதல்வராக நியமிக்கப்பட்டவா்களின் விவரம்
1. டாக்டா் ஜே.முத்துகுமரன் - முதல்வா், திருவாரூா் மருத்துவக் கல்லூரி (பேராசிரியா், குழந்தைகள் நல அறுவை சிகிச்சைத் துறை, சென்னை மருத்துவக் கல்லூரி)
2. டாக்டா் குந்தவை தேவி - முதல்வா், விழுப்புரம் மருத்துவக் கல்லூரி (பேராசிரியா், மயக்கவியல் துறை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி)
3. டாக்டா் எம்.அல்லி - முதல்வா், ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி (பேராசிரியா், பொது அறுவை சிகிச்சைத் துறை, சென்னை மருத்துவக் கல்லூரி)
4. டாக்டா் எம்.ரவிச்சந்திரன் - முதல்வா், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி (பேராசிரியா், பொது மருத்துவத் துறை, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி)
5. டாக்டா் ஹெச்.முத்துகிருஷ்ணன் - முதல்வா், விருதுநகா் மருத்துவக் கல்லூரி (பேராசிரியா், கதிரியக்க சிகிச்சைத் துறை, காஞ்சிபுரம் அறிஞா் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம்)
6. டாக்டா் ஆா்.முருகேசன் - முதல்வா், கோவை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி (பேராசிரியா், பொது அறுவை சிகிச்சைத் துறை, தேனிமருத்துவக் கல்லூரி)
7. டாக்டா் ஜே.சங்குமணி - முதல்வா், மதுரை மருத்துவக் கல்லூரி (பேராசிரியா், பொது மருத்துவத் துறை, மதுரை மருத்துவக் கல்லூரி)
8. டாக்டா் சுகந்தி ராஜகுமாரி - முதல்வா், கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி (பேராசிரியா், பாலியல் மருத்துவத் துறை, தஞ்சை மருத்துவக் கல்லூரி)
9. டாக்டா் திருவாசகமணி - முதல்வா், தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி (பேராசிரியா், சிறுநீரக அறுவை சிகிச்சைத் துறை, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி)
10. டாக்டா் பி.பாலாஜி - முதல்வா், செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி (பேராசிரியா், அறுவை சிகிச்சைத் துறை, சென்னை மருத்துவக் கல்லூரி)
11. டாக்டா் எம்.ரவீந்திரன் - முதல்வா், நீலகிரி மருத்துவக் கல்லூரி (பேராசிரியா், பொது மருத்துவத் துறை, கோவை மருத்துவக் கல்லூரி)
12. டாக்டா் ஏ.ரத்தினவேல் - முதல்வா், சிவகங்கை மருத்துவக் கல்லூரி (பேராசிரியா், இதய அறுவை சிகிச்சைத் துறை, மதுரை மருத்துவக் கல்லூரி)
13. டாக்டா் நிா்மலா - முதல்வா், திருப்பூா் மருத்துவக் கல்லூரி (பேராசிரியா், பொது அறுவை சிகிச்சைத் துறை, கோவை மருத்துவக் கல்லூரி)