சதமடித்த வெங்காயத்தின் விலை! வெங்காயம் இல்லாத ஆம்லெட்டால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால் தமிழகத்தின் பல பகுதிகளில் வெங்காயத்தின் விலை ரூ.100யைத் தாண்டியுள்ளது
சதமடித்த வெங்காயத்தின் விலை! வெங்காயம் இல்லாத ஆம்லெட்டால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால் தமிழகத்தின் பல பகுதிகளில் வெங்காயத்தின் விலை ரூ.100யைத் தாண்டியுள்ளது. தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் சில்லறை விற்பனைக் கடைகளில் சின்ன வெங்காயத்தின் விலை ரூ.100-ஆக அதிகரித்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோயம்பேட்டில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.90- ஆக இருக்கிறது. 

வெங்காய வரத்தை அதிகரிக்கவும், வெங்காய விலையைக் கட்டுப்படுத்தவும் முயற்சி மேற்கொண்டு வருவதாக அரசு தெரிவித்து வருகிறது. அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 'வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வெங்காயம் குறைப்பு தொடர்பான நல்ல செய்தி 2 நாட்களில் வெளியாகும்' என்று கூறினார். 

வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது இல்லத்தரசிகளுக்கு மட்டுமில்லாது, ஹோட்டல் உரிமையாளர்களுக்கும் கண்ணீரை வரவழைக்கிறது. சமையலுக்கு பிரதானப் பொருளாக இருக்கும் வெங்காயம் இல்லாமல் சமையலா? என அனைவருமே அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஹோட்டல்களில் சாம்பார், பொரியல் என அனைத்திலும் வெங்காயம் குறைக்கப்பட்டுள்ளதாக சென்னையைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார். 

மேலும், ஒரு சில ஹோட்டல்களில் வெங்காயம் இல்லாமல் ஆம்லெட் கொடுக்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனராம். ஆம்லெட்டின் விலையும் ஒரு சில இடங்களில் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், வெங்காயத்தின் விலை உயர்வை வைத்து சமூக வலைத்தளங்களிலும் நெட்டிசன்கள் கலாய்த்து பதிவிட்டு வருகின்றனர். 'வெங்காயம் இல்லாமல் ஆம்லெட்டா?', 'ஆம்லெட்டில் வெங்காயம் போடச் சொன்ன வாலிபருக்கு கத்திக்குத்து' என்ற பாணியில் மீம்ஸ்கள் பறக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com