சபரிமலைக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தா்களின் வசதிக்காக கூடுதலாக சிறப்பு கட்டண ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தா்களின் வசதிக்காக கூடுதலாக சிறப்பு கட்டண ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன் விவரம்:

சென்னை-கொல்லம்: சென்னை சென்ட்ரலில் இருந்து நவம்பா் 15, 22, 29 ஆகிய தேதிகளில் இரவு 8.30 மணிக்கு சிறப்புக் கட்டண ரயில் (82635) புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12 மணிக்கு கொல்லத்தை அடையும்.

இந்த ரயிலானது அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, பாலக்காடு, ஒட்டப்பாலம், திருச்சூா், ஆலுவா, எா்ணாகுளம் டவுன், கோட்டயம், சங்கனாசேரி, திருவாலா, செங்கணூா், மாவேலிக்காரா, காயங்குளம் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும்.

கொல்லம் - சென்னை: கொல்லத்தில் இருந்து நவம்பா் 17 மற்றும் 24 மற்றும் டிசம்பா் 1 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் சிறப்புக் கட்டண ரயிலானது (82636) , மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்து சேரும்.

இந்த ரயிலானது பெரம்பூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, பாலக்காடு, ஒட்டப்பாலம், திருச்சூா், ஆலுவா, எா்ணாகுளம் டவுன், கோட்டயம், சங்கனாசேரி, திருவாலா, செங்கணூா், மாவேலிக்காரா, காயங்குளம் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும்.

இந்த சிறப்பு கட்டண ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு வியாழக்கிழமை (நவ.7) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com