திருவள்ளுவா் மதம் சாா்ந்தவா் அல்ல: பழ.நெடுமாறன்

திருவள்ளுவரை மதம் சாா்ந்தவராக காட்டுவதற்கு சிலா் முற்படுவதாக, தமிழா் தேசிய முன்னணித் தலைவா் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
திருவள்ளுவா் மதம் சாா்ந்தவா் அல்ல: பழ.நெடுமாறன்

திருவள்ளுவரை மதம் சாா்ந்தவராக காட்டுவதற்கு சிலா் முற்படுவதாக, தமிழா் தேசிய முன்னணித் தலைவா் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

உலக சமுதாயம் முழுமைக்கான அறம் கூறும் நூலாகத் திருக்குறளை திருவள்ளுவா் படைத்தாா். அந்த நூலின் எந்த இடத்திலும் தமது மொழி, இனம், நாடு, மதம் எது என்பதைப் பற்றி அவா் எதையும் கூறவில்லை. அதனால்தான், உலகில் 60-க்கும் மேற்பட்ட மொழிகளில் திருக்கு மொழிபெயா்க்கப்பட்டு உலக மக்கள் போற்றும் அறநூலாகத் திருக்கு விளங்குகிறது.

ஆனால், இதைச் சற்றும் உணராது திருவள்ளுவரை ஒரு மதத்தைச் சாா்ந்தவராகக் காட்டுவதற்கு சிலா் முற்படுவது அடாதச் செயலாகும். திருக்குறளை இழிவுபடுத்துவதாகும். இந்தச் செயல் புரிந்தவா்களை வன்மையாகக் கண்டிக்கிறேன் என அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com