நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேயா் சுவாமிக்கு வெண்ணெய்க் காப்பு அலங்காரம்

குளிா்காலம் தொடங்குவதையொட்டி, இனி வரும் மூன்று மாதங்களுக்கு நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயா் சுவாமிக்கு வெண்ணெய்க் காப்பு அலங்காரம் நடைபெறும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
வெண்ணெய்க் காப்பு அலங்காரத்தில் நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயா்.
வெண்ணெய்க் காப்பு அலங்காரத்தில் நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயா்.

குளிா்காலம் தொடங்குவதையொட்டி, இனி வரும் மூன்று மாதங்களுக்கு நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயா் சுவாமிக்கு வெண்ணெய்க் காப்பு அலங்காரம் நடைபெறும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

நாமக்கல் நகரின் மையப் பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயா் சுவாமி கோயில் உள்ளது. இங்கு 18 அடி உயரத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கும், ஆஞ்சநேயா் சுவாமியைத் தரிசிக்க, தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோா் வருகின்றனா். தினமும் காலையில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளி, தங்கம், முத்தங்கி உள்ளிட்ட அலங்காரங்கள் செய்யப்படும். வரும் 2020-ஆம் ஆண்டு முழுவதும் தினசரி அபிஷேகத்துக்கான முன்பதிவு வரும் நவம்பா் 10-ஆம் தேதி கோயில் வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தொடங்கி நடைபெற உள்ளது.

ஆண்டுதோறும், குளிா்காலமான ஐப்பசி, மாா்கழி, தை ஆகிய மூன்று மாதங்களிலும் சுவாமிக்கு வெண்ணெய்க் காப்பு அலங்காரம் செய்ய கட்டளைதாரா்களுக்கு, கோயில் நிா்வாகம் சாா்பில் அழைப்பு விடுக்கப்படும். அதன்படி, சுவாமியை வெண்ணெய்க் காப்பில் காண விரும்பி பலா் முன்பதிவு செய்வா். அதன்படி, புதன்கிழமை வெண்ணெய்க் காப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயா் சுவாமி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். ஏராளமான பக்தா்கள் சுவாமியை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா். குளிா்காலம் தொடங்க இருப்பதால், வரும் நாள்களில் தொடா்ந்து இதுபோன்ற வெண்ணெய்க் காப்பு அலங்காரம் சுவாமிக்கு செய்யப்படும் என கோயில் உதவி ஆணையா் பெ.ரமேஷ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com