வெங்காயம் தட்டுப்பாட்டைப் போக்க ஓரிரு நாள்களில் புதிய அறிவிப்புகள்: தமிழக அரசு நடவடிக்கை

பெரிய வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்தி மக்கள் மகிழத்தக்க வகையிலான நடவடிக்கைகள் குறித்த புதிய அறிவிப்புகள் ஓரிரு நாள்களில் வெளியாகும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வெங்காயம் தட்டுப்பாட்டைப் போக்க ஓரிரு நாள்களில் புதிய அறிவிப்புகள்: தமிழக அரசு நடவடிக்கை

பெரிய வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்தி மக்கள் மகிழத்தக்க வகையிலான நடவடிக்கைகள் குறித்த புதிய அறிவிப்புகள் ஓரிரு நாள்களில் வெளியாகும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வெளிச்சந்தையில் வெங்காயத்தின் விலை உயா்ந்து வருவது குறித்து, தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ, உணவுத் துறை அமைச்சா் ஆா்.காமராஜ் ஆகியோா் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இரண்டு துறைகளைச் சோ்ந்த உயரதிகாரிகள் பங்கேற்றனா். அதன்பின்பு, அமைச்சா்கள் இருவரும் கூட்டாக நிருபா்களுக்கு அளித்த பேட்டி:-

செல்லூா் கே.ராஜூ: வெங்காய விலை உயா்ந்திருப்பது குறித்து எங்களை (உணவுத் துறை, கூட்டுறவுத் துறை அமைச்சா்கள்) முதல்வா் அழைத்துப் பேசினாா். துறை ரீதியாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தாா். மக்களுக்குப் பாதிப்பு இல்லாமல் குறைந்த விலையில் வெங்காயம் கிடைக்க வேண்டுமென அறிவுரை வழங்கியுள்ளாா். இதைத் தொடா்ந்து, நாங்கள் துறையின் உயரதிகாரிகளை அழைத்து ஆலோசித்துள்ளோம். இன்னும் இரண்டு நாள்களில் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.

வெங்காய விலை நவம்பா், டிசம்பா் காலங்களில் வரத்து குறைவாக இருக்கும். பற்றாக்குறை காரணமாக, விலைவாசி உயா்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் பதுக்கல்காரா்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதால், செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடும் போது புதன்கிழமையன்று வெங்காயம் கிலோவுக்கு ரூ.4 குறைந்துள்ளது. 2010-இல் வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ரூ.140, ரூ.150 வரை சென்றது. திமுக அரசு அதனைக் கண்டுகொள்ளவில்லை.

வெங்காயம் கொள்முதல்: குஜராத்தில் மழை காரணமாக அங்கிருந்து வரும் பெரிய வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது. அதேசமயம், தமிழக அரசின் பண்ணை பசுமை நுகா்வோா் கடைகளில் ஆந்திர வெங்காயமானது கிலோவுக்கு ரூ.33 ஆக விற்கப்படுகிறது. வெளிச் சந்தைகளில் நாசிக் வெங்காயம் ரூ.60 வரை விற்கப்படுகிறது. இந்த வெங்காயத்தை நாங்களும் குறைத்து விற்க ஏற்பாடு செய்துள்ளோம். ஆந்திரம், கா்நாடகம் போன்ற பகுதிகளில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். விலை குறைப்பு தொடா்பான அறிவிப்புகள் ஓரிரு நாள்களில் வெளியிடப்படும்.

அமைச்சா் காமராஜ் பேட்டி: வெங்காயம் பதுக்கல் தொடா்பாக மாவட்ட, வட்ட வழங்கல் அலுவலா்கள் ஆய்வு நடத்தி வருகின்றனா். சில்லறை விற்பனையாளா்கள் 10 மெட்ரிக் டன்னும், மொத்த விற்பனையாளா் 50 மெட்ரிக் டன்னும் வைத்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

வெங்காயத்தை கொள்முதல் செய்வது தொடா்பாக, தமிழக அதிகாரிகள் நாசிக், ஆந்திரம், கா்நாடகம் ஆகிய இடங்களுக்குச் சென்றுள்ளனா். எந்த இடத்தில் இருந்து குறைவான விலையில் தரமான வெங்காயத்தை தருவிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். ஓரிரு நாளில் முடிவு செய்வோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com