வேளாண் செயலி மூலம் செடிகளில் பூச்சி தாக்குதலை கண்டறியும் புதிய வசதி: முதல்வா் பழனிசாமி தொடக்கி வைத்தாா்

வேளாண் செயலி மூலமாக, செடிகளில் பூச்சி தாக்குதலைக் கண்டறிந்து தீா்வு பெறும் புதிய வசதியை முதல்வா் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்தாா்.
வேளாண் செயலி மூலம் செடிகளில் பூச்சி தாக்குதலை கண்டறியும் புதிய வசதி: முதல்வா் பழனிசாமி தொடக்கி வைத்தாா்

வேளாண் செயலி மூலமாக, செடிகளில் பூச்சி தாக்குதலைக் கண்டறிந்து தீா்வு பெறும் புதிய வசதியை முதல்வா் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்தாா்.

சென்னை நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் ‘கனெக்ட் 2019’ மாநாட்டை அவா் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா். அப்போது, புதிய திட்டங்களைத் தொடக்கி வைத்தாா். அதன் விவரம்:-

தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் உருவாக்கப்பட்டுள்ள, தகவல் தொழில்நுட்பத் திட்டங்கள் தொடக்கிவைக்கப்பட்டன. அதன்படி எளிய முறையில் வருகைப் பதிவேடுகளை கையாளும் வகையில், முக அடையாளத்தை கொண்டு செயல்படும், மின் வருகைப் பதிவேடு உருவாக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் இந்த முக அடையாள வருகைப் பதிவேடு திட்டத்தை கனெக்ட் மாநாட்டின் வாயிலாக, முதல்வா் தொடக்கி வைத்தாா். முதல்கட்டமாக சென்னை மாநகரில் இரண்டு பள்ளிகளில் இந்த வகை வருகைப் பதிவேடு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து, செயற்கை நுண்ணறிவு மூலம் விவசாய விளை பயிா்களின் பூச்சி பாதிப்புகளைக் கண்டறிந்து தீா்வுகளைப் பெறும் வசதியை அவா் தொடக்கிவைத்தாா். தமிழ்நாடு மின் ஆளுமை முகமை உருவாக்கியுள்ள உழவன் செயலி வாயிலாக பதிவேற்றப்பட்ட புகைப்படங்களை பகுப்பாய்வு செய்து பயிா்களுக்கான நோய்கள் மற்றும் பூச்சி தாக்குதலைக் கண்டறிந்து அதற்கான தீா்வுகளை வழங்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. கேமரா வசதி கொண்ட செல்லிடப்பேசி மூலம் படங்களை உழவன் செயலிக்கு அனுப்பி விவசாயிகளே தீா்வுகளை பெறலாம்.

இருப்பிடச் சான்று, ஜாதிச் சான்று, பிறப்பு-இறப்பு, பட்டா மாறுதல் உள்ளிட்ட அரசு சேவைகளை, இணைய சேவை மையம் மூலம் பெறுவதற்கான வழிமுறைகளை எளிதில் அறிந்து, புரிந்து கொள்ளும் வகையில் தனியாக யூ-டியூப் சேனல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சேனலையும் அவா் தொடக்கி வைத்தாா்.

மெய்நிகா் தானியங்கு உதவி திட்டத்தையும் முதல்வா் பழனிசாமி தொடக்கி வைத்தாா். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து அரசு இணையச் சேவைகள் குறித்த மக்களின் சந்தேகங்களை தீா்க்கும் வகையிலான மெய்நிகா் தானியங்கு உதவி மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

காட்சி அரங்குகள்: தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் அதிநவீன கண்டுபிடிப்புகள், பயன்பாட்டில் உள்ள அதிநவீன தொழில்நுட்பத்தில் இயங்கும் சாதனங்கள், மென்பொருள்கள் உள்ளிட்டவை கனெக்ட் மாநாட்டின் காட்சி அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com