Enable Javscript for better performance
தமிழகத்தில் இருந்த வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் நிரப்பி பலநாட்கள் ஆகிவிட்டது: துரைமுருகன்- Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்தில் இருந்த வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் நிரப்பி பலநாட்கள் ஆகிவிட்டது: துரைமுருகன்

    By DIN  |   Published on : 08th November 2019 03:00 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    duraimurugan

    தமிழகத்தில் இருந்த வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் நிரப்பி பலநாட்கள் ஆகிவிட்டது என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

    சென்னை போயஸ் கார்டனில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், தமிழகத்தில் சரியான ஆளுமைக்கான வெற்றிடம் உள்ளது. அரசியல் கட்சி தொடங்கும் வரை தொடர்ந்து நடிப்பேன் என்றார். 

    இதுதொடர்பாக திமுக பொருளாளர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில், வெற்றிடத்தை காற்று நிரப்பிவிடும் என்பது விஞ்ஞானம்.

    தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பி பலநாட்கள் ஆகிவிட்டது. ரஜினி நேரடியாக அரசியலுக்கு வந்தால் அதை உணர்வார். ரஜினி மீது யார் காவி சாயம் பூசினார்கள் என்று எங்களுக்கு தெரியாது.

    அவர் யாருக்கு பதில் சொல்லியிருக்கிறார் எனவும் எங்களுக்கு தெரியாது. இவ்வாறு அவர் கூறினார். 
     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai