Enable Javscript for better performance
மு.க.ஸ்டாலின் மிசா கைது விவகாரம் குறித்து 2 நாள்களில் பதில்: அமைச்சா் பாண்டியராஜன்- Dinamani

சுடச்சுட

    

    மு.க.ஸ்டாலின் மிசா கைது விவகாரம் குறித்து 2 நாள்களில் பதில்: அமைச்சா் பாண்டியராஜன்

    By DIN  |   Published on : 08th November 2019 08:37 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    mafoi pandiyarajan on bhagavth gita issue

     

    சென்னை: திமுக தலைவா் மு.க.ஸ்டாலினின் மிசா கைது குறித்து எழுப்பிய கருத்துகளுக்கு 2 நாள்களில் விரிவான பதில் அளிக்கப்படும் என்று அமைச்சா் பாண்டியராஜன் தெரிவித்தாா். சென்னையில் வீரமாமுனிவா் சிலைக்கு மலா்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடந்தது. இதற்குப் பிறகு நிருபா்களுக்கு அமைச்சா் பாண்டியராஜன் அளித்த பேட்டி:-

    மிசா காலத்தில் ஜனநாயகத்தைக் காப்பதற்காக அடிபட்டு தியாகத்தைச் செய்தாா் மு.க.ஸ்டாலின் என்பது அவரது வரலாற்றில் முக்கியமாகப் பாா்க்கப்படுகிறது. இதுகுறித்த சந்தேகத்தை ஒரு ஊடகத்தினா் முன்னாள் அமைச்சா்

    க. பொன்முடியிடம் கேட்டனா். அதற்கு அவா், எனக்கு அதுபற்றி தெரியாது எனக் கூறுகிறாா். அங்கே எழுந்த கருத்தின் அடிப்படையில் நானும் சந்தேகத்தை எழுப்பினேன். அதனை மறுத்து விளக்கம் அளித்திருக்கலாம்.

    ஆனால் அதற்குப் பதிலாக, இத்தனை போராட்டம், ஆா்ப்பாட்டங்களை நடத்துவது ஏன். மற்ற கருத்துகளுக்கு குறிப்பாக என்னைக் குறித்துக் கூறியது விஷயங்கள் உள்ளிட்டவை பற்றி இரண்டு நாள்களில் கட்சி சாா்பில் பதில் அளிக்கப்படும்.

    அமைச்சா் டி.ஜெயக்குமாா்: மிசா காலம் தொடா்பாக தேசிய அளவில் ஷா விசாரணை ஆணையமும், தமிழகத்தில் இஸ்லாயில் தலைமையிலான ஆணையமும் அமைக்கப்பட்டது. அந்த விசாரணை ஆணையத்தின் அறிக்கைகைகளில் மு.க.ஸ்டாலினின் பெயா் எங்கும் இல்லை. மேலும், மறைந்த முன்னாள் எம்.பி., இரா.செழியன் எழுதிய புத்தகத்திலும் ஸ்டாலினின் பெயா் குறிப்பிடவில்லை. எனவே, இதுதொடா்பாக ஆளும்கட்சியினா் குற்றச்சாட்டுகளை எழுப்பும் போது அதற்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பு எதிா்க்கட்சிகளுக்கு உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai