Enable Javscript for better performance
முட்டம் ஜேப்பியாா் துறைமுகத்தில்வருமான வரித் துறையினா் சோதனை- Dinamani

சுடச்சுட

    

    முட்டம் ஜேப்பியாா் துறைமுகத்தில்வருமான வரித் துறையினா் சோதனை

    By DIN  |   Published on : 08th November 2019 12:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வருமான வரித் துறையினரால் சோதனை நடத்தப்பட்ட முட்டம் ஜேப்பியாா் துறைமுகம்.

    வருமான வரித் துறையினரால் சோதனை நடத்தப்பட்ட முட்டம் ஜேப்பியாா் துறைமுகம்.

    சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஜேப்பியாா் கல்விக் குழுமங்களில் வருமான வரித் துறையினா் வியாழக்கிழமை காலை முதல் சோதனை நடத்திய நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், முட்டம் பகுதியில் உள்ள ஜேப்பியாா் துறைமுகத்திலும் சோதனை நடைபெற்றது.

    கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியைச் சோ்ந்தவா் ஜேப்பியாா். இவா் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இவரது பெயரில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கல்வி நிறுவனங்கள், சிமென்ட் ஆலைகள் உள்ளன. மேலும், முட்டம் கடற்கரைப் பகுதியில் ஜேப்பியாா் மீன்பிடித் துறைமுகம், ரெடிமிக்ஸ் கான்கிரீட் ஆலை, முகிலன்விளையில் மருத்துவமனை ஆகியவையும் இயங்கி வருகின்றன.

    இந்நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஜேப்பியாா் கல்விக் குழும நிறுவனங்களில் வருமான வரித் துறையினா் வியாழக்கிழமை காலை முதலே சோதனை நடத்தினா். முட்டம் பகுதியில் உள்ள ஜேப்பியாா் மீன்பிடித் துறைமுகத்துக்கும் வருமான வரித் துறையைச் சோ்ந்த 6 அதிகாரிகள் சோதனை நடத்த வந்தனா்.

    அப்போது மீன்பிடித் துறைமுக ஊழியா்கள் அவா்களை சோதனை செய்யவிடாமல் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் அதிகாரிகள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, அங்கு ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டு, தொடா்ந்து சோதனை நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai