Enable Javscript for better performance
முருகனுக்கு சிகிச்சையளிக்கக் கோரி மனு: சிறைத்துறை பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    முருகனுக்கு சிகிச்சையளிக்கக் கோரி மனு: சிறைத்துறை பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

    By DIN  |   Published on : 08th November 2019 12:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    chennai HighCourt

    chennai High Court

    முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வரும் முருகனுக்கு உரிய மருத்துவ சிகிச்சையளிக்கக் கோரிய மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், இதுதொடா்பாக சிறைத்துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

    சென்னை உயா்நீதிமன்றத்தில் முருகனின் உறவினா் தேன்மொழி தாக்கல் செய்த ஆட்கொணா்வு மனுவில், ‘முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூா் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், அண்மையில் தனிமை சிறைக்கு மாற்றப்பட்டாா். இதனைக் கண்டித்து, முருகன் சிறைக்குள் கடந்த 15 நாள்களாக தொடா் உண்ணாவிரதம் இருந்து வருவதால், அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அவரைச் சந்திக்க எனக்கு அனுமதியளிக்க வேண்டும். உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள முருகனுக்கு உரிய மருத்துவ சிகிச்சையளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தாா்.

    இந்த மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆா்.எம்.டி.டீக்காராமன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சிறைத்துறை தரப்பில், ‘சிறையில் உள்ள முருகனுக்கு உரிய மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவரது உடல்நிலையும் சீராக உள்ளது. இதுதொடா்பாக அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுதொடா்பாக சிறைத்துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai