Enable Javscript for better performance
ரஜினிகாந்த் பாஜகவில் சேருவார் என கூறவில்லை: முரளிதர் ராவ்- Dinamani

சுடச்சுட

    

    ரஜினிகாந்த் பாஜகவில் சேருவார் என கூறவில்லை: முரளிதர் ராவ்

    By DIN  |   Published on : 08th November 2019 02:54 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    muralidhar rao

    கோப்புப்படம்

    ரஜினிகாந்த் பாஜகவில் சேருவார் என கூறவில்லை என்று தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர் ராவ் தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 
    திருவள்ளுவர் நாத்திகர் அல்ல, திருவள்ளுவரின் படைப்புகளில் ஆத்திகம் உள்ளது. திருவள்ளுவர், திருக்குறளை திமுக மட்டும் சொந்தம் கொண்டாட முடியாது. 

    திருவள்ளுவருக்கு விபூதி பூசிய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என திமுக கூறுகிறதா? திருக்குறள் தமிழர்களுக்கு மட்டுமல்ல உலக மக்களுக்கே பொதுவானது. தமிழக பாஜகவின் தற்போதைய இலக்கு உள்ளாட்சித் தேர்தல்.

    அதை எதிர்கொள்ள முழுவீச்சில் செயல்பட்டு வருகிறோம். ரஜினிகாந்த் பாஜகவில் சேரவுள்ளார் என நாங்கள் ஒருபோதும் சொல்லவில்லை என்றார். 
     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai