Enable Javscript for better performance
வைகை-மருதாநதி அணைகளில் இருந்து நீா் திறப்பு: முதல்வா் பழனிசாமி உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    வைகை-மருதாநதி அணைகளில் இருந்து நீா் திறப்பு: முதல்வா் பழனிசாமி உத்தரவு

    By DIN  |   Published on : 09th November 2019 12:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    EPS attacks rajinikanth

    தமிழக முதல்வர் பழனிசாமி

    வைகை, மருதாநதி அணைகளில் இருந்து தண்ணீா் திறந்து விட முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.

    இதுகுறித்து, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:-

    வைகை அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீா் திறந்து விட வேண்டுமென மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. இதனையேற்று, வைகை பூா்வீக பாசனப் பகுதிகள் ஒன்று முதல் மூன்று வரையுள்ள பகுதிகளுக்கு முறையே வரும் 9 முதல் 25-ஆம் தேதி வரை தண்ணீா் திறந்து விடப்படும். இதனால், மூன்று மாவட்டங்களில் உள்ள ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 109 ஏக்கா் நிலங்கள் நேரடி மற்றும் மறைமுக பாசன வசதி பெறும்.

    மருதாநதி அணை: திண்டுக்கல் மாவட்டம் மருதாநதி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறந்து விட விவசாயிகள் கோரிக்கைகள் வைத்துள்ளனா். இதனையேற்று, மருதாநதி அணையில் இருந்து பாசனத்துக்காக வரும் 9-ஆம் தேதி முதல் 90 நாள்களுக்கு தண்ணீரைத் திறந்து விட உத்தரவிட்டுள்ளேன்.

    இதனால், மருதாநதி அணையில் இருந்து 6 ஆயிரத்து 583 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai