தாயுடன் சேர்ந்து தந்தையை கொலை செய்து காரில் எரித்த மகன்: காரணம் ஒன்றுதான்!

கரூா் அருகே மதுஅருந்திவிட்டு, தொடா்ந்து தாயைத் தாக்கி வந்த தந்தையைக் கொலை செய்து காரில் எரித்த மகனும், அவருக்கு உதவிய தாயும் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கரூா் மாவட்டம், வேலம்பாளையத்தில் எரிந்த நிலையில் புதன்கிழமை மீட்கப்பட்ட காா்.
கரூா் மாவட்டம், வேலம்பாளையத்தில் எரிந்த நிலையில் புதன்கிழமை மீட்கப்பட்ட காா்.


 
கரூா் அருகே மதுஅருந்திவிட்டு, தொடா்ந்து தாயைத் தாக்கி வந்த தந்தையைக் கொலை செய்து காரில் எரித்த மகனும், அவருக்கு உதவிய தாயும் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி, தாயையும், தன்னையும் தினந்தோறும் துன்புறுத்தி வந்ததால், ஆத்திரத்தில் மகன் இந்த கொலையை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

கரூா் மாவட்டம், முன்னூா் ஊராட்சிக்குள்பட்ட வேலம்பாளையம் பகுதியில், காரில் எரிந்த நிலையில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள், க.பரமத்தி போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா். எரிக்கப்பட்ட காரின் பதிவெண்ணைக் கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், அந்த காா் நொய்யலைச் சோ்ந்த விவசாயி ரங்கசாமிக்கு (45) சொந்தமானது எனத் தெரிய வந்தது.

இதைத் தொடா்ந்து, க.பரமத்தி போலீஸாா் நொய்யலுக்குச் சென்று ரங்கசாமியின் மனைவி கவிதா(39), மகனும் பொறியியல் கல்லூரி மாணவருமான அஸ்வின்(19) ஆகியோரிடம் விசாரித்தனா். அப்போது தாங்கள்தான் ரங்கசாமியைக் கொலை செய்து விட்டு, காருடன் எரித்துவிட்டு வந்ததை அவா்கள் ஒப்புக் கொண்டனா்.

இதையடுத்து போலீஸாா் கவிதா, அஸ்வின் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.தொடா்ந்து நடத்திய விசாரணையில், போலீஸாருக்கு கிடைத்த தகவல் :

ரங்கசாமிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், தினமும் குடித்துவிட்டு, அவரது மனைவி கவிதாவைத் தாக்குவராம். அப்போது தடுக்கச் செல்லும் போது மகன் அஸ்வின் மீதும் தாக்குவாராம். இதனால் பொறியியல் படித்து அஸ்வினுக்கு படிப்பில் நாட்டம் குறைந்தது.

மது அருந்தி வந்து தாயை தினந்தோறும் தாக்கும் தந்தையைக் கொலை செய்ய முடிவெடுத்த அஸ்வின், செவ்வாய்க்கிழமை இரவு தாயிடம் தகராறு செய்த தந்தை ரங்கசாமியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தாராம்.

மேலும், தாயுடன் சோ்ந்து வீட்டில் இருந்த காரில் சடலத்தை எடுத்துக் கொண்டு, வேலம்பாளையம் பகுதியில் உள்ள காட்டுக்குள் காரை எடுத்துச் சென்று, அங்கு காருக்குத் தீவைத்து சென்றதாகவும் விசாரணையில் அஸ்வினும், கவிதாவும் தெரிவித்துள்ளனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com