அமெரிக்கா புறப்பட்டார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்!

துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், தனது மகனும், தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ரவீந்திரநாத் குமார் மற்றும் துறை சார்ந்த
அமெரிக்கா புறப்பட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
அமெரிக்கா புறப்பட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.



துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், தனது மகனும், தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ரவீந்திரநாத் குமார் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் 10 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா பயணம் புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர் அங்குள்ள சிகாகோ, ஹூஸ்டன் நகரங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவா் பங்கேற்கவுள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை சென்னையில் இருந்து புறப்பட்ட அவர், அமெரிக்காவின் சிகாகோ நகரத்துக்குச் செல்கிறார். 9 ஆம் தேதி சிகாகோ தமிழ்ச் சங்கம் சார்பாக நடத்தப்படும் குழந்தைகள் தின விழாவில் பங்கேற்கிறார். 10 ஆம் தேதி ‘சா்வதேச சமுதாய ஆஸ்கா் 2019’ விழாவில், துணை முதல்வருக்கு விருது பெறுகிறார்.

அதன்பின், 12 ஆம் தேதி சிகாகோ நகர மேயா் மற்றும் இல்லினாய்ஸ் ஆளுநா் உள்பட முக்கிய பிரமுகா்களை சந்தித்துப் பேசவுள்ளார். அதைத் தொடா்ந்து வரும் 13 ஆம் தேதியன்று அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி செல்கிறார். பின்னா், 14 ஆம் தேதி ஹூஸ்டன நகருக்குச் சென்று தமிழ் அமைப்புகள் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு அங்குள்ள முக்கிய தொழில் முனைவோர்களிடம் தமிழகத்தில் தொழில் தொடங்க முதலீடு செய்வது குறித்து கலந்துரையாடுகிறார்.

15-ஆம் தேதி ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கான மின்னணு டோனா் பலகையை தொடங்கி வைக்கிறார். 16 ஆம் தேதி நியூயார்க் சென்று தமிழ் சங்கங்களின் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்த சுற்றுப் பயணத்தின் போது துணை முதல்வர் ஓபிஎஸ் மகனும், தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ரவீந்திரநாத் குமார் மற்றும் நிதித்துறை முதன்மைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் உடன் புறப்பட்டுச் சென்றனர். வரும் 17-ஆம் தேதி துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தமிழகம் திரும்புகிறார். 

அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்துக்கு நேற்று வியாழக்கிழமை நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.

அமெரிக்கா செல்வதற்காக விமான நிலையம் சென்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுக நிர்வாகிகள், தொண்டர் என ஏராளமானோர் மாலை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர். பூரண கும்ப மரியாதையும் அளிக்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com