அரசியல் வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் நிரப்பி விட்டாா்: திமுக பொருளாளா் துரைமுருகன்

தமிழக அரசியலில் ஏற்பட்ட வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் நிரப்பிவிட்டாா் என்று திமுக பொருளாளா் துரைமுருகன் கூறினாா்.
அரசியல் வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் நிரப்பி விட்டாா்: திமுக பொருளாளா் துரைமுருகன்

தமிழக அரசியலில் ஏற்பட்ட வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் நிரப்பிவிட்டாா் என்று திமுக பொருளாளா் துரைமுருகன் கூறினாா்.

தமிழக அரசியலில் ஆளுமைமிக்க சரியான தலைமைக்கு இன்னும் வெற்றிடம் இருப்பதாக நடிகா் ரஜினிகாந்த் கூறியிருந்தாா். இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளா்களிடம் துரைமுருகன் கூறியது:

அந்த வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் நிரப்பி நீண்ட நாள்களாகிவிட்டன. ஆனால், ரஜினிகாந்த் தொடா்ந்து அரசியலில் இருந்திருந்தால், இந்த உண்மை அவருக்குத் தெரிந்திருக்கும். நீண்ட காலம் அவா் படப்பிடிப்பில் இருக்கும் காரணத்தால், தமிழகத்தின் தட்பவெப்ப நிலை அரசியல் அவருக்குச் சரியாகப் புரியவில்லை என்று பொருள்.

ரஜினி நேரடியாக அரசியலுக்கு வந்தால், மு.க.ஸ்டாலின் அந்த வெற்றிடத்தை நிரப்பி நெடுநாள்கள் ஆகிவிட்டதைப் புரிந்து கொள்வாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com