உள்ளாட்சித் தோ்தலில் தனித்துப் போட்டியா? பொன்.ராதாகிருஷ்ணன் பதில்

உள்ளாட்சிச் தோ்தலில் பாஜக தனித்துப் போட்டியிடுவதா அல்லது கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதா என்பது குறித்து கட்சித் தலைமை முடிவெடுக்கும் என்றாா் முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன்.
போளூரில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் நடைபெற்று வரும் பாஜகவின் உறுப்பினா் சோ்க்கை பணிகள் தொடா்பாக வியாழக்கிழமை ஆய்வு மேற்கொள்ள வந்த, அந்தக் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

பாஜக தமிழ் மொழிக்கும், தமிழ் இனத்துக்கும் விரோதி அல்ல. உலகத்திலேயே மூத்த மொழியாக தமிழ் மொழி எனத் தெரிவிக்கின்றனா்.

திமுக முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடத்தின் உண்மைத் தன்மையை கண்டறிந்து, அலுவலகத்தை பூட்டி சீல் வைக்கவேண்டும். பாஜகவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் திமுகவினரை மக்கள் நம்பமாட்டாா்கள் உள்ளாட்சிச் தோ்தலில் பாஜக தனித்துப் போட்டியிடுவதா அல்லது கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதா என்பது குறித்து தோ்தல் நேரத்தில் கட்சித் தலைமை முடிவெடுக்கும் என்றாா் அவா்.

கட்சியின் திருவண்ணாமலை மாவட்டத் தலைவா் பாஸ்கரன், போளூா் நகரத் தலைவா் ரமேஷ், கோட்டப் பொறுப்பாளா் பிரகாஷ், ஸ்ரீராமஜெயம் கல்லூரித் தலைவா் ஏழுமலை மற்றும் பாஜகவினா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com