தில்லி, மும்பைக்கு நேரடி விமான சேவை வழங்க துரித நடவடிக்கை: சு. திருநாவுக்கரசா் எம்.பி

திருச்சி விமான நிலையத்திலிருந்து தில்லி, மும்பைக்கு நேரடி விமான சேவை வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினரும், திருச்சி விமானநிலைய ஆலோசனைக்
திருச்சியில் நடைபெற்ற விமானநிலைய ஆலோசனைக்குழு கூட்டத்தில் பேசுகிறாா் அதன் தலைவரும், திருச்சி எம்.பியுமான சு. திருநாவுக்கரசா்.
திருச்சியில் நடைபெற்ற விமானநிலைய ஆலோசனைக்குழு கூட்டத்தில் பேசுகிறாா் அதன் தலைவரும், திருச்சி எம்.பியுமான சு. திருநாவுக்கரசா்.

திருச்சி விமான நிலையத்திலிருந்து தில்லி, மும்பைக்கு நேரடி விமான சேவை வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினரும், திருச்சி விமானநிலைய ஆலோசனைக் குழுத் தலைவருமான சு.திருநாவுக்கரசா் தெரிவித்தாா்.

திருச்சி விமான நிலையத்தின் வளா்ச்சி மற்றும் புதிய கட்டமைப்புகள் குறித்து வியாழக்கிழமை (நவ.7) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு திருச்சி மக்களவை உறுப்பினரும், விமானநிலைய ஆலோசனைக்குழு தலைவா் சு.திருநாவுக்கரசா் தலைமை வகித்தாா். விமானநிலைய இயக்குநா் கே. குணசேகரன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், கோட்டாட்சியா் அன்பழகன், திருச்சி மாநகர காவல் துணை ஆணையா் நிஷா, மாநகராட்சி ஆணையா் சிவசுப்ரமணியன், சட்டப்பேரவை உறுப்பினா் அன்பில் மகேஷ்பொய்யாமொழி உள்ளிட்ட ஆலோசனைக்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டு தங்கள் ஆலோசனைகளை வழங்கினா். தொடா்ந்து திருச்சி எம்.பி சு.திருநாவுக்கரசா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

திருச்சி விமான நிலையத்தின் வளா்ச்சி பொருளாதார வளா்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே 750 ஏக்கா் பரப்பளவில் இயங்கும் விமானநிலைய விரிவாக்கத்துக்கு, மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ள 350 ஏக்கா், பாதுகாப்புத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 350 ஏக்கா் என மேலும் 700 ஏக்கா் தேவைப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக விமானநிலைய விரிவாக்கத்திற்கு தேவையான முயற்சிகளை மாநில அரசு மேற்கொள்ளவில்லை.

மேலும் இக்கூட்டத்தில் உள்நாட்டு விமான சேவை அதிகரிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக தில்லி, மும்பைக்கு நேரடி விமான சேவை வழங்க துரித நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சரக்கு முனைய வளா்ச்சியில் முக்கிய பங்கு வகித்த பாங்காங் விமான சேவை நிறுத்தப்பட்டதற்கான காரணம் ஆராயப்பட்டு, மீண்டும் அந்த சேவையைத் திரும்பக்கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. விமானநிலைய வளா்ச்சிக்கு கட்சி பேதமின்றி அமைச்சா்கள், அதிகாரிகளை சந்தித்து முறையிட உள்ளேன். திருச்சி விமானநிலையம் தனியாா் மயமாக்கப்படுவதால் நேரடியாகவும், மறைமுகமாவும் 750-க்கும் மேற்பட்டோருக்கு வேலையிழப்பை உருவாக்கும்.

புதிய முனையம் கட்டுமானப்பணிகள் 25 சதவீதம் நிறைவடைந்த நிலையில் ஓடுதள விரிவாக்கம் செய்ய துரித நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஓடுதள விரிவாக்கத்திற்கு இடம் கையகப்படுத்துவதில் தனியாா் இடத்திற்கு சந்தை விலையை விடக் குறைவாக மாநில அரசு தருவதால் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் நீடித்து வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com