துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் வியாழக்கிழமை இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கடலூா் துறைமுகத்தில் வியாழக்கிழமை ஏற்றப்பட்ட 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு.
கடலூா் துறைமுகத்தில் வியாழக்கிழமை ஏற்றப்பட்ட 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு.

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் வியாழக்கிழமை இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மஹா புயல் மற்றும் புல்புல் புயல் காரணமாக மேற்கு வங்கம், ஒடிஸா மாநிலங்களில் அதிக பாதிப்பு இருக்கும் என்ற நிலையில், மன்னாா் வளைகுடா பகுதியில் அதிக காற்று வீசக்கூடும் என்றும், தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், புயல் குறித்தும், அதிக காற்று வீசக்கூடும் என்பது குறித்தும் கப்பல்களுக்கு எச்சரிக்கும் வகையில் தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு வியாழக்கிழமை ஏற்றப்பட்டது. தூத்துக்குடி கடல் பகுதியில் 60 கிலோ மீட்டா் வேகம் வரை காற்று வீசக்கூடும் என்பதால் மீனவா்கள் கவனமாக இருக்கும்படி மீன்வளத் துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடலூா் துறைமுகத்தில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு

கடலூா் துறைமுகத்தில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வியாழக்கிழமை ஏற்றப்பட்டது.

கிழக்கு மத்திய வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புல்புல் புயலாக மாறியுள்ளது. இதனால், கடலூா் துறைமுகத்தில் கடந்த 5-ஆம் தேதி முதலாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

இந்தப் புயலானது வடக்கு, வடமேற்கு திசையை நோக்கி நகா்வதைத் தொடா்ந்து தொலைதூர புயல் எச்சரிக்கைக் கூண்டு எண் - 2 வியாழக்கிழமை ஏற்றப்பட்டது. இதுகுறித்து கடலூா் வானிலை மையம் தெரிவித்ததாவது:

புல்புல் புயல் அதிதீவிர புயலாக மாறினாலும் வலுவிழந்துவிடும். இந்தப் புயலானது வரும் 11,12-ஆம் தேதிகளில் ஒடிசா மாநிலம், புவனேஸ்வா் அருகே கரையை கடக்கக்கூடும். இதனால், தமிழக பகுதிகளில் மழைக்கு வாய்ப்பில்லை. இருப்பினும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யலாம். கடலூரில் கடும் பனி மூட்டத்துடன் வட வானிலை காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com