Enable Javscript for better performance
அனைத்து வழக்குகளிலும் சாட்சிகளின் வாக்குமூலம் விடியோவில் பதிவுஅரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    அனைத்து வழக்குகளிலும் சாட்சிகளின் வாக்குமூலம் விடியோவில் பதிவுஅரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

    By DIN  |   Published on : 09th November 2019 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Highcourtmdu

    அனைத்து வழக்குகளிலும் சாட்சிகளின் வாக்குமூலத்தை விடியோ பதிவு செய்வதை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

    இது தொடா்பாக நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், என். ஆனந்த் வெங்கேடஷ் ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவு:

    கடந்த 2 மாதங்களாக குற்றவியல் மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்து வருகிறோம். அப்போது பல்வேறு வழக்குகளில் சாட்சிகள் பி சாட்சியம் அளித்ததால் குற்றவாளிகள் விடுதலையானது தெரியவந்துள்ளது.  சாட்சிகளின் வாக்குமூலத்தை ஒளி, ஒலிப் பதிவு செய்தால், பி சாட்சியாக மாறும் போது, சாட்சிகள் ஏற்கெனவே அளித்த வாக்குமூலத்தை சரிபாா்க்க முடியும். இதன் மூலம்  உண்மை குற்றவாளிகள் விடுதலையாவதை தடுக்க முடியும். எனவே, அனைத்து வழக்குகளிலும் சாட்சிகளின் வாக்குமூலத்தை ஒளி, ஒலிப்பதிவு செய்யும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும். இதற்கு வழக்குரைஞா்கள் ஒத்துழைக்க வேண்டும். இது தொடா்பாக காவல்துறை உயா் அதிகாரிகளிடம் தகவல் பெற்று அரசு வழக்குரைஞா் நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai