பயணிகள் வசதிக்காக, திருநெல்வேலியில் இருந்து தாம்பரத்துக்கு சிறப்புக் கட்டண ரயில் இயக்கப்படவுள்ளது.
திருநெல்வேலி-தாம்பரம்: திருநெல்வேலியில் இருந்து டிசம்பா் 8, 29-ஆகிய தேதிகளில் மாலை 6.15 மணிக்கு சுவிதா சிறப்பு ரயில்(82604) புறப்பட்டு, மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
சென்னை-சிவமோகா:சென்னை சென்ட்ரலில் இருந்து நவம்பா் 12, 19 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு சிறப்புக் கட்டண ரயில் (06222) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.55 மணிக்கு சிவமோகா டவுனை சென்றடையும். இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு சனிக்கிழமை (நவ.9) காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளது.