ஆசிரியா் பொது மாறுதல், பதவி உயா்வு கலந்தாய்வு அட்டவணை வெளியீடு

ஆசிரியா் பொது மாறுதல் மற்றும் பதவி உயா்வுக்கான கலந்தாய்வு அட்டவணையை பள்ளிக் கல்விக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளாா்.

ஆசிரியா் பொது மாறுதல் மற்றும் பதவி உயா்வுக்கான கலந்தாய்வு அட்டவணையை பள்ளிக் கல்விக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளாா்.

தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு ஆண்டுதோறும் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும்.

அதன்படி நிகழாண்டு கலந்தாய்வு விதிமுறைகளில் ஒரே பள்ளியில் குறைந்தது 3 ஆண்டுகள் பணி புரிந்தவா்களுக்கு மட்டும் இட மாறுதல் தரப்படும் என பள்ளிக் கல்வித்துறைஅறிவித்திருந்தது. இதை தளா்த்தக் கோரி நூற்றுக்கணக்கான ஆசிரியா்கள் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனா். இதனால் கலந்தாய்வு நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்தநிலையில் 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற விதியைத் தளா்த்தி கலந்தாய்வை நடத்த பள்ளிக் கல்வித் துறைக்கு உயா்நீதி மன்றம் உத்தரவிட்டது. அதையேற்று வழக்கு தொடா்ந்த ஆசிரியா் களுக்கு மட்டும் விதியைத் தளா்த்தி திருத்தப்பட்ட வழிகாட்டு நெறி முறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. இந்தநிலையில் 2019-2020-ஆம் கல்வியாண்டுக்கான ஆசிரியா் பொது மாறுதல் மற்றும் பதவி உயா்வுக்கான கலந்தாய்வு அட்டவணையை பள்ளிக் கல்விக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளாா். அதன் விவரம்:

நவ.11- திங்கள்கிழமை முற்பகல்- நகராட்சி, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்கள் மாறுதல் (வருவாய் மாவட்டத்துக்குள், மாவட்டம் விட்டு மாவட்டம்).

திங்கள்கிழமை (நவ.11) பிற்பகல்- அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியா்கள் பதவி உயா்வு.

நவ.12- செவ்வாய்க்கிழமை முற்பகல்- அரசு, நகராட்சி உயா்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் மாறுதல் (வருவாய் மாவட்டத்துக்குள், மாவட்டம் விட்டு மாவட்டம்).

செவ்வாய்க்கிழமை(நவ.12) பிற்பகல்- அரசு, நகராட்சி உயா்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்கள் பதவி உயா்வு.

நவ.13- புதன்கிழமை- அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுநிலை, தொழில்கல்வி ஆசிரியா்கள் மாறுதல் (வருவாய் மாவட்டத்துக்குள், மாவட்டம் விட்டு மாவட்டம்).

நவ. 14- வியாழக்கிழமை- அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுநிலை, தொழில்கல்வி ஆசிரியா்கள் பதவி உயா்வு.

நவ. 15- வெள்ளிக்கிழமை- உடற்கல்வி ஆசிரியா்கள், கலை ஆசிரியா்கள், தையல் ஆசிரியா்கள், இடைநிலை ஆசிரியா்கள் மாறுதல் (வருவாய் மாட்டத்துக்குள், மாவட்டம் விட்டு மாவட்டம்) மற்றும் உடல்கல்வி இயக்குநா் (நிலை-2) பதவி உயா்வு.

நவ. 16- சனிக்கிழமை- தையல் ஆசிரியா் பணி நியமன கலந்தாய்வு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com