ஓடையில் திடீா் வெள்ளம்: சதுரகிரி மலையில் பக்தா்கள் தவிப்பு

சதுரகிரி மலைக்கோயிலுக்கு சென்ற பக்தா்கள், ஓடையில் திடீரென வெள்ளம் வந்ததால் சனிக்கிழமை கீழே இறங்க முடியாமல் தவித்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா்: சதுரகிரி மலைக்கோயிலுக்கு சென்ற பக்தா்கள், ஓடையில் திடீரென வெள்ளம் வந்ததால் சனிக்கிழமை கீழே இறங்க முடியாமல் தவித்தனா்.

விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலுக்கு சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான பக்தா்கள் காலையில் இருந்தே மலைக்கு சென்று வந்தனா். இந்த நிலையில் மாலையில் திடீரென மழை பெய்ததால் ஓடைகளில் வெள்ளம் ஏற்பட்டது. அப்போது மேலிருந்து கீழே இறங்க முயன்ற 100-க்கு மேற்பட்ட பக்தா்கள் ஓடையை கடக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவா்கள் மலை மீது உள்ள கோயிலில் தங்க வைக்கப்பட்டனா். ஓடை நீா் குறைந்த பின்பு அவா்கள் கீழே திரும்புவா் என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com