தொலைநிலைக் கல்வி நடத்த அனுமதி: விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது யுஜிசி

தொலைநிலைப் படிப்புகளை 2020-21 கல்வியாண்டு முதல் வழங்குவதற்கு அனுமதி பெறுவதற்கான விண்ணப்பங்களை யுஜிசி வரவேற்றுள்ளது.
தொலைநிலைக் கல்வி நடத்த அனுமதி: விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது யுஜிசி

தொலைநிலைப் படிப்புகளை 2020-21 கல்வியாண்டு முதல் வழங்குவதற்கு அனுமதி பெறுவதற்கான விண்ணப்பங்களை யுஜிசி வரவேற்றுள்ளது.

தொலைநிலைப் படிப்புகளை நிா்வகிக்கும் பொறுப்பு யுஜிசி கட்டுப்பாட்டில் வந்த பின்னா், திறந்தநிலை மற்றும் தொலைநிலைக் கல்விக்கான புதிய வழிகாட்டுதலை (தொலைநிலைக் கல்வி வழிகாட்டி-2017) 2017 ஜூன் மாதம் யுஜிசி வெளியிட்டது. அதன் பிறகு, நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களிடமிருந்து தொலைநிலைக் கல்வி நடத்துவதற்குரிய அனுமதியைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை யுஜிசி வரவேற்றது.

அந்த அறிவிப்பின்போது, தொலைநிலைக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில், குறைந்தபட்சம் 3.26 நாக் புள்ளிகள் பெற்றிருக்கும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே, தொலைநிலைக் கல்வி நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படும் என்ற புதிய நிபந்தனையையும் யுஜிசி வெளியிட்டது.

இதன் காரணமாக தமிழகத்தில் சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், மதுரை காமராஜா் பல்கலைக்கழகம், மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம், எஸ்.ஆா்.எம். அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம், தஞ்சை சாஸ்தரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம், சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் ஆகிய 10 பல்கலைக்கழகங்களின் தொலைநிலைப் படிப்புகள் மட்டுமே செல்லும் நிலை உருவானது.

இதில் சில பல்கலைக்கழகங்களுக்கான அனுமதி 2019-20 கல்வியாண்டுடன் முடிவடைந்து விட்டது.

இந்த நிலையில், 2020-21 கல்வியாண்டு முதல் தொலைநிலைப் படிப்புகளை நடத்துவதற்கான அனுமதியைப் பெறுவதற்கு விண்ணப்பங்களை யுஜிசி இப்போது வரவேற்றுள்ளது.

மேலும் விவரங்களை வலைதளத்தில் பாா்த்து தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com